ப்ளஸ் டூ தேர்வு எகிறும் ஹார்ட் பீட் - டேக் இட் ஈஸி பாலிசி

               2020 ஆம் ஆண்டுக்கான ப்ளஸ் டூ தேர்வு தொடங்கி இருக்கிறது. மார்ச் மாதம் வரும் IPL கிரிக்கெட் போல ஆர்வமுடன் நாம் கடந்து செல்ல வேண்டிய சாதாரணமான நிகழ்வுதான் இந்தத் தேர்வும் . இதில் மாணவர்களும் பெற்றோர்களும் பதட்டமடைய ஒன்றும் இல்லை.
           புதிய பாடத்திட்டத்தில் இத்தேர்வு முதன் முறையாக நடைபெறுவதால் இதில் நல்லதும் உண்டு. ஆசிரியர்கள் ஏற்கனவே இருந்த பாடத்திட்டத்தில் மெனக்கெட்டிருக்க வாய்ப்பில்லை. எல்லாம் நடத்துன பாடந்தானே என்று வகுப்புக்கு வந்திருப்பார்கள். இந்த ஆண்டோ அவர்களும் சற்று கூடுதல் முயற்சி எடுத்திருப்பார்கள்.
மாணவர்களையும் கூடுதல் முயற்சிக்குப் பழக்கியிருப்பார்கள். தேர்வு கருதி ஆசிரியர்கள் செய்வதாக இருந்த வேலை நிறுத்தமும் செய்வதில்லை என்று முடிவெடுத்த ஆண்டு இந்தாண்டு . மேலும் வரையறுக்கப் பட்ட பாடத்திட்டம் . 
              ஓராண்டு முழுவதும் கற்றல் - கற்பித்தல் சிறப்பாகநடந்திருக்கிறது. ரிவிசன்தேர்வுகளையும்நடத்தியிருக்கிறர்கள். எனவே மாணவர்களும் முழுமையாகத் தயாராகிய பின்னரே இத்தேர்வைச் சந்திக்கின்றனர்.                       பெற்றோர்கள் தங்கள் பயத்தை மாணவர்களின் மனத்தில் ஏற்றி விடாமல் இருந்தாலே போதும். இந்த ஆண்டு ப்ளஸ் டூ தேர்வு எழுதும் மாணவர்கள் பட்டையக் கிளப்பி விடுவார்கள்.
பெற்றோர்கள் பிள்ளைகளின் உடல் நலம், மனநலத்தை மட்டும் கவனித்துக் கொண்டாலே போதும். இம்முறை நிச்சயம் உங்கள் பிள்ளைகள் சாதிக்கப் போவது உறுதி . பிறகென்ன டேக் இட் ஈஸி. தேர்வு என்பதைத் தேர்வாகப் பாருங்கள். அதில் ஏதோ வாழ்க்கையே அடங்கியிருப்பதாகப் பிரம்மை கொள்ளத் தேவையில்லை.             நீண்ட நெடிய வெற்றி வாழ்வு ஒரு தேர்வுக்குள்ளே சுருங்கிப் போகுமா என்ன? ப்ளஸ் டூ தேர்வில் வெற்றி பெற்று நல்ல மதிப்பெண் பெற்றவர் களும் சிறப்பான வாழ்க்கை நடத்துகிறார்கள்.
அதில் தோல்வியடைந்தவர்கள் குறைவான மதிப்பெண் பெற்றவர்களும் சிறப்பாகத் தான் வாழ்கிறார்கள். தீராத ருசியுடைய வாழ்க்கைச் சமுத்திரம் தேர்வுத் துளிக்குள் முடிந்து விடாது. கூல் ப்ரோ...

Post a Comment

0 Comments