கசக்கிப் பிழியும் போக்குவரத்து நெரிசல் - தப்பிப் பிழைக்க என்ன வழி?

       
 காலையில் கிளம்பி அலுவலகத்திற்கு இரு சக்கர
வாகன த்தில் போகின்றவர்கள் அனுபவிக்கும் அல்லல் களுக்கு அளவே இல்லை. நல்லா தூங்கி எழுந்து அருமையாக ஒரு குறியல் போட்டு பிடித்த ஆடையை ரசித்து அணிந்து கொண்டு தலைவாரி நம் முகத்தை அழகாகக் காட்டும் கீரீம்களை அள்ளி அப்பிக் கொண்டு பைக்கை எடுத்து அலுவலகம் போவதற்குள் வடையைப் பிழிந்து எறியும் காகிதம் போல் ஆகிப் போகிறோம். 
         
  வகை வகையான ஒலிகளால் காது கிழிகிறது. இதில் சாவு கிராக்கி உள்பட நாராசமான வசவுகள் வேறு. பெட்ரோல் புகை ஏற்க முடியாமல் சீக்கிரமான என்னக் காப்பாத்துடா என்று மூக்கு மூக்கால் அழுகிறது. தலைச் சூட்டால் வியர்வை பொங்க ஹெல்மேட்க்குள் ஆவிக் குளியல் ஒன்று நடக்கும். பைக்கில் அமர்ந்தபடியே நடக்கும் தண்டனை வேறு கால்களைச் சோர்வாக்கும். இந்தச் சிக்கலுக்கு மத்தியில் 'சிக்னலும் சேர்ந்து நம் உயிரெடுக்கும். 

போயிங் ரக ராணுவ விமானத்தை இயக்கும் துல்லியத்தோடு வாகனங்களை இயக்கியாக வேண்டும். நேர் கொண்ட பார்வையிலிருந்து சற்று விலகினாலும் அந்த நாள் கிளினிக்கில் கழிய நேரும். சின்ன இடைவெளிக்குள் பூதம் போல புகுந்து வரும் வாகனங்களை எப்போதும் எதிர்பார்க்கும் மனவலிமை ரொம்ப அவசியம். சர்க்கஸ்காரனின் சாகசம் தெரியாமல் பைக் ஓட்டும் அப்பாவிகள் பிரஷர் மாத்திரைகளைப் வண்டிச் சாவியோடு மறக்காமல் எடுத்துக் கொள்ள வேண்டும். 
       
 ஒரு நாள் வேலைக்கான உடல் ஆற்றலை ஒரு மணி நேரப் பயணத்திற்கே கொடுத்து விட்டு சக்கையாக அலுவலக இருக்கையில் அமர்ந்து அந்த AC காற்றுப் படும் போது வரும் சுகமிருக்கே அப்பாடா சாதித்து விட்டோம் என்பது போலிருக்கும். 
         இதிலிருந்து தப்புவதற்கு ஒரே வழி போக்குவரத்து நெரிசலுக்கு முன்பே புறப்பட்டு விடுவது வேறென்ன செய்வது. அதற்குத் தகுந்தாற் போல் விடுபட்ட வேலைகளைச் செய்ய அலுவலக நேரம் தொடங்கும் முன்பு இருக்கும் நேரத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். உதாரணமாக ஒரு மணி நேரம் காலையில் படிப்பவர்களா அந்த ஒரு மணி நேசத்திற்கு முன்பாக அலுவலகம் போய் அங்கு படிக்கலாம். நடைப்பயிற்சியை அலுவலகத்திற்குப் பக்கத்தில் இருக்கும் பூங்காக்களைக் கண்டு பிடித்து அங்கு மேற்கொள்ளலாம்.                 
அதில் நடைமுறைக் கஷ்டங்கள் இருந்தாலும் வழக்கத்திற்குக் கொண்டு வந்து விட்டால் அதுவே பழகிவிடும் பாஸ். மாத்தி யோசித்து மகிழ்ந்து வாழ்வோம்.

 மேலும் படிக்க: 

வாட்டி வதைக்கும் கோடைக்காலம் கூலாகக் கடக்க என்ன வழி?

Post a Comment

0 Comments