ஒரு சதம் மட்டும் பத்தாது ( எ செண்டூரி ஈஸ்நாட் எனப் ) -ஆங்கிலம் .





A Century is not enough


ஒரு சதம் மட்டும் பத்தாது ( எ செண்டூரி ஈஸ்நாட் எனப் ) -ஆங்கிலம்


சவுரவ் கங்குலியின் சுய சரிதம் !

சவுரவ் கங்குலி ! கிட்டத்தட்ட 2008 ஆம் ஆண்டே கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுப்பெற்றார் . ஆனால் இன்றளவும் அவரை மறக்காத ஒரு பெரும் ரசிகர் பட்டாளமே உண்டு .


“ சச்சினின் சுயசரிதம் அவரின் வளர்ச்சியை பேசும் , தோனியின் சுயசரிதம் அவரின் முன்னேற்றத்தை மட்டுமே பேசும் ஆனால் கங்குலியின் சரிதமோ ஒட்டுமொத்த இந்திய அணியின் முன்னேற்றத்தையும் பேசும் “ - வீரேந்திர சேவாக் .


“கங்குலி என்பது சாதாரண பெயர் அல்ல , அது ஒரு சென்சேஷன் ! “ - கபில் தேவ்.


“கங்குலி போன்ற ஒரு உயிர்ப்பான வெற்றியை மட்டுமே தேடும் கேப்டன் உங்கள் எதிர் அணியில் இருந்தால் அவரை மதித்தே ஆவதை தவிர வேறு வழி இல்லை” - ஸ்டிவ் வாக்.


“இங்கு இன்னொரு சச்சின் கூட வரலாம் ஆனால் ஒரே ஒரு கங்குலி தான்” - சச்சின் டெண்டுல்கர் .

இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம் . 1992 ஆம் ஆண்டிலேயே இந்திய அணியின் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் இடம்பெற்றார் … ஆனால் கங்குலிக்கு வாய்ப்பு குறைவாகவே அமைந்தது அதையும் சரியாக பயன்படுத்திக்கொள்ள முடியவில்லை. இந்திய அணியும் தோல்வியுற்றது . கங்குலி அணியில் இருந்து நீக்கப்பெற்றார் .
 
அதன் பிறகு 1996 ஆம் ஆண்டு தான் இங்கிலாந்து தொடரில் மீண்டும் அணியில் இடம் பெற்றார் . அந்த இடைப்பட்ட ஆண்டுகளை அவர் விவரித்த விதம் , நேர்மறையான அணுகுமுறை , சாவல்களை எதிர்கொண்டது , ஏமாற்றம் அடைந்தது என அனைத்துமே வாழ்க்கைப்பாடமாக அமைந்துள்ளது .
சாதாரணமாகவே கங்குலி எதற்கும் அஞ்சாமல் பேசுபவர் , அதுவும் அவருடைய சுய சரிதம் ….அவருக்கே உரிய தொனியில், கம்பீரத்துடன் அவரே நமக்கு அருகில் அமர்ந்து பேசுவது போல அமைந்துள்ளது .


மைதானங்களை வர்ணிப்பது , வீரர்களுடனான உரையாடல் , சொற்போர்கள் என புத்தகம் மிகவும் சுவாரஸ்யமாக நகர்கிறது .


இங்கிலாந்து தொடரில் சதங்களை அடித்தாலும் , இந்திய அணியில் அவரின் இடத்தை தக்க வைத்துக்கொள்ள அவர் பட்ட பாடுகள் , பந்துவீச்சால் தப்பிய தருணங்கள் , விமர்சனங்கள் , நெருக்கடிகள் என அவரே கூறி இருப்பது ஒரு புது வித அனுபவம்.

“நான் விளையாடும் போது , எனது இடம் நிரந்திரமா என்கிற கேள்வி ஓடிக்கொண்டே இருக்கும் , அது சிலநேரங்களில் எனது ஆட்டத்தையும் பாதித்தது , எனவே நான் கேப்டன் ஆனவுடன் எனது அணியின் புதிய வீரர்களுக்கு அத்தகைய உறுதியை அளித்தேன் . அதன் விளைவு எந்த நெருக்கடியும் இல்லாமல் அவர்களின் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர் வெற்றியும் பெற்றனர் “ - கங்குலி


இதைப்போன்ற எண்ணற்ற சுவாரசிய தகவல்களை அடுக்கியுள்ளார் இப்புத்தகத்தில் . தசரா துர்கா பூஜை சமயத்தில் அவரின் ஓய்வு அறிவிப்பு அதை அவர் விவரித்த விதம் கவித்துவம் .


கிரிக்கெட் பிடித்தால் கங்குலியை ரசிக்காமல் இருந்திருக்க வாய்ப்பே இல்லை !

இப்புத்தகத்தை எனது பிறந்த நாள் பரிசாக அளித்த எனது மனைவிக்கும் , தம்பிக்கும் எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை மட்டற்ற மகிழ்ச்சி !!

சா.ரா.

Post a Comment

0 Comments