காதல் மன்னன் என்னும் பெயரில் டிக் டாக் வீடியோ பதிவிடும் ஒருவன் இப்போது பாளையங் கோட்டைச் சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. இந்தக் காதல் மன்னன் ரொமாண்டிக் டூயட் பாடல்களை வைத்து டிக் டாக் செய்து லைக் - ஜ அள்ளி வந்தான். தனக்கு வரும் லைக்குகளில் பெண் ரசிகைகளைக் குறிவைத்து சமூக ஊடகங்களின் வழியாகப் பழகி வந்துள்ளான். தன்னைபோனில்அழைத்தவர் களிடம் நேரில் வந்தால் மட்டுமே பேசுவேன் என்றானாம்.
அவனிடம் பேசாவிட்டால் சோறு இறங்காத சில இளம் பெண்கள் அவனை நேரில் சந்திக்க, அவனோடு டூயட் பாடல்களுக்கு நடனமாட ,காதல் மன்னன் சும்மாவா இருப்பான்.
அவர்களின் நவரச நடிப்பை வீடியோ எடுத்து அதை வைத்துபணம் பறித்து வந்துள்ளான். ஒரு கட்டத்தில் வீடியோவைக் காட்டி அவர்களை மிரட்டவும் தொடங்கியிருக்கிறான். அதன் விளைவு இப்போது சிக்கிச் சின்னாபின்னாம் ஆகிஇருக்கிறான். நம்முடைய திறமைகளை வெளிப்படுத்திக் கொள்ளக் கிடைத்த அற்புதமான வரங்கள் இந்தச் சமூக ஊடகங்களும்ஆன்ட்ராய்ட் அப்ளிகேசன்களும்.அதைச் சரியாகப் பயன்படுத்தி UP -இல் போவதை விட்டு விட்டுக் குறுக்கு புத்தியால் இப்படியா ஆப்பு வாங்குவது. ஏற்கனவே எந்த வயதில் இருந்தாலும் பெண் பிள்ளைகளுக்குப் பாதுகாப்பு இல்லாத இந்தச் சூழலில் தனியாகப்போய் இப்படிப்பட்டவர் களிடம் சிக்கிக் கொள்வதா சிங்கப் பெண்களுக்கு அழகு?
பெரியோர்கள் வகுத்த ஒழுக்க எல்லைகளை மீறிவதில் ஒரு தற்காலிக குறுகுறுப்பு இருக்கத்தான் செய்கிறது.அக்குறுகுறுப்பு உணர்வை நெருக்கமான தோழிகளிடம் சென்சார் இல்லாமல் உரையாடுவதன் வழி கடந்து விடுவது தான் சரியானதும் பாதுகாப்பானதும் ஆகும் என்கின்றனர் உளவியலாளர்கள் .
பொள்ளாச்சி சம்பவம் தந்த விழிப்புணர்வில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளாமல் நம் இளம் பெண்கள் தொடர்ந்து பாதை மாறலாமா? ஆண்களுக்கு இது ஒரு காதல் விளையாட்டு. ஜாலியாகவே இந்த அவமானங்களைக் கடந்து விடுவான். ஆம்பளப் பையன்னா கொஞ்சம் அப்பிடி இப்பிடித்தான் இருப்பான் என்று அவன் குடும்பமும் சமூகமும் அதை எளிதில் கடந்து விடும்.
காவலன் SOS செயலி கட்டாயம் உங்கள் மொபைலில் இருக்கட்டும். நீங்கள் நம்பிச் செல்லும் இடங்களில் எதிர்பாராத சம்பவம் நடந்தால் அது உங்களைக் காப்பாற்றலாம். சினிமாக் காய்ச்சலில் சிக்கி சமூகத்தின் நிஜ நிலவரம் தெரியாமல் மாட்டிக் கொண்டு வருந்தாமல் இளமைக்காலத்தைச் சரியாகக் கொண்டாடித் தீருங்கள். Cheer Up.
1 Comments
Thaguntha nera padippu
ReplyDelete