வடகிழக்குப் பருவ மழைபெய்து வருவதால் கர்நாடகத்தில் இருந்து பெய்துவரும் கனமழையில் காவிரியில் நீர் வரத்து அதிகரித்து காணப்படுகின்றது இதனால் மேட்டூர் அணை நிரம்பியுள்ளது. இந்த ஆண்டின் 2 மாதங்களில் அணையானது மூன்றாவது முறையாக நிரம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.
சேலம் மாவட்டத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே ஸ்டேன்லி அணை அமைந்துள்ளது. இது மேட்டூரில் இருப்பதால் மேட்டூர் அணை என்றே பேச்சு வழக்கில் அழைக்கின்றோம். மேட்டூர் அணையானது 120 அடி முழு கொள்ளவு கொண்டது ஆகும். கர்நாடகத்தின் காவிரி நீரின் தேக்கம் ஸ்டேன்லி அணையில் இருக்கும்.
மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்படும் நீரால், 12 மாவட்டங்களைச்
சேர்ந்த 16.05 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி கிடைக்கப் பெற்று வருகின்றன. மேலும் மக்களின் குடிநீர் மற்றும் தொழிற்சாலைகளின் தேவைகளுக்கு இந்த அணை நீர்தான் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
நடப்பாண்டின் செப்டம்பர் மாதம் தென்மேற்கு பருவமழை தீவிரம் காட்டியது.
கர்நாடக மாநிலத்தின் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
இதன் காரணமாக கபினி, கிருஷ்ணராஜ சாகர் உள்ளிட்ட அணைகள் உச்சத்தை தொட்டன.
இதனால் திறந்துவிடப்பட்ட உபரி நீரால் காவிரியில் வெள்ளப்பெருக்கு
ஏற்பட்டது. இந்த நீர் பிலிகுண்டுலு, ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணையை வந்து
சேர்ந்தது. ஒரே மாதத்தில் இரண்டு முறை முழு கொள்ளளவை எட்டி
ஆச்சரியமூட்டியது.
இந்த சூழலில் தென்மேற்கு பருவமழை முடிவடைந்து, தற்போது வடகிழக்கு பருவமழை
தொடங்கியுள்ளது. மீண்டும் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை
பெய்யத் தொடங்கியுள்ளது.
இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது.
இந்நிலையில் நடப்பாண்டில் 3வது முறையாக முழு கொள்ளளவான 120 அடியை
எட்டியுள்ளது. குறிப்பாக கடந்த 2 மாதங்களில் 3வது முறை நீர்மட்டம் 120
அடியை எட்டி சாதனை படைத்துள்ளது.
மேட்டூர் அணையின் வரலாற்றில் 86 ஆண்டுகளில் 44வது முறையாக தற்போது முழு கொள்ளளவை எட்டியுள்ளது. வடக்கிழக்கு மருவமழை காரணமாக நீர்வரத்து காவிரிப் பகுதியில் அதிகரித்து காணப்படுகின்றன.
0 Comments