ஏகாதசி நாளில் நரசிம்ம ராஜ மந்திரம்

 இன்று ஏகாதசி  விஷ்ணு அவதாரங்களுக்காக நாள் முழுவதும் உபவாசம் இருந்து நாளைதான் உணவு உண்பார்கள் பக்தர்கள் இந்நாளில்  நரசிம்மரின் ராஜ மந்திரம் பற்றி பக்தர்  தெரிவித்தார் அவரின்  பக்திச் சாரத்தை கேட்டு உங்களுக்கு இவற்றை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றோம். 

பக்தர்கள் கிழே கொடுக்கப்பட்டுள்ள மந்திர உச்சாடணங்களை பின்பற்றி படித்து அருள் பெறவும். 
நரசிம்ம ராஜ மந்திரம்:
ஸ்ரீ மந்திர ராஜபத ஸ்தோத்திரம்.இன்று  வியாழன் ஏகாதசி தினம் அன்று பதிவு செய்வதில்  மகிழ்ச்சி அடைகின்றோம். 
மனித வாழ்வு பல மேடு பள்ளங்களைத் தாண்டி பயணிக்க வேண்டி இருக்கும். வாழ்வில் ஏற்படும் பல மாற்றங்களை மனிதன் எதிர்கொள்ள வேண்டும். அவ்வாறு நமக்கிரும் சாவால்களை எதிர்கொள்ள இறைவழிபாடு முக்கியப் பங்கு வகிக்கின்றது. 
திருமணத்தடை, குழந்தை வரம், கடன் பிரச்னை, குடும்பத்தில் கருத்து வேறுபாடு, சொத்து பிரச்னை, தம்பதிகள் பிரிந்திருத்தல், தொழிலில் பின்னடைவு. இன்னும் வாழ்க்கையில் எத்தனையோ பிரச்னைகள் இருக்கின்றன. இவை அத்தனையையும் உடைத்தெறியும் அழகான ஸ்தோத்திரமே ஸ்ரீ மந்திர ராஜபத ஸ்தோத்திரம். தினமும் மாலையில், ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் படத்தின் முன் காய்ச்சிய பாலை வைத்து இதை சொல்ல வேண்டும். ஸ்லோகம் படிக்க சிரமமாக இருந்தால், பொருளைப் படித்து பலன் பெறலாம் என பக்திச் சாரத்தில்  தெரிவிக்கப்பட்டது.



விஷ்ணு கீழுள்ள பாதாள உலகம் வரையுள்ள திருவடியையும், மேலுள்ள தேவலோகம் வரையுள்ள திருமுடியையும் கொண்டிருக்கிறார். அவரது கைகளும், தோள்களும் எட்டுத் திசைகளிலும் பரவியுள்ளன. விஸ்வ ரூபம் கொண்ட அந்த நரசிம்மரை நான் வணங்குகிறேன்.


ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்மப்பெருமாள் திருவடிகள் சரணம்

ஜ்யோதீம் ஷ்யர்கேந்து நக்ஷத்ர

ஜ்வலநாதீந் யநுக்ரமாத்!

ஜ்வலந்தி தேஜஸா யஸ்ய

தம் ஜ்வலந்தம் நமாம்யஹம்!!


பொருள்: 
சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், அக்னி ஆகிய அனைத்தும் விஷ்ணுவிடம் இருந்து வெளிவரும் பிரகாசத்தைக் கொண்டே ஒளி வீசுகின்றன. இப்படிப்பட்ட தேஜஸ்(ஒளி) மிக்க விஷ்ணுவின் அவதாரமான நரசிம்மரே! உம்மை நான் வணங்குகிறேன்.


ஸர்வேந்த்ரியை ரபி விநா
ஸர்வம் ஸர்வத்ர ஸர்வதா!
யோ ஜாநாதி நமாம் யாத்யம்
தமஹம் ஸர்வதோ முகம்!!

பொருள்: சக, இந்திரியங்கள், புலன்களின் உதவி இல்லாமல் எங்கும் நடக்கும் அனைத்து விஷயங்களையும் அறியும் பரம்பொருள் விஷ்ணு. எல்லாத் திசைகளிலும் பார்க்கும் சக்தி பெற்றிருப்பதால் ‘ஸர்வதோமுகம்’ என போற்றப்படும் சக்தியுடைய நரசிம்மரே! உம்மை நான் வணங்குகிறேன்.

நரவத் ஸிம்ஹவச் சைவ
யஸ்ய ரூபம் மஹாத்மந!
மஹா ஸடம் மஹா தம்ஷ்ட்ரம்
தம் ந்ருஸிம்ஹம் நமாம்யஹம்!!

பொருள்: 
பக்தர்களுக்காக மனித வடிவமும், அசுரர்களை பயமுறுத்த சிங்க வடிவமுமாக வந்தவரே! பிடரி முடியும், கோரைப் பற்களும் ஒளி வீச அவதரித்த நரசிம்மரே! உம் அழகான வடிவத்தை நான் வணங்குகிறேன்.


வ்ருத்தோத் புல்ல விசாலாக்ஷம்
விபக்ஷ க்ஷய தீக்ஷிதம்!!
நிநாத த்ரஸ்த விச்வாண்டம்
விஷ்ணும் உக்ரம் நமாம்யஹம்!!

பொருள்: 
பெரியதும், உருண்டையானதும், பக்தர்களைக் கண்டு மகிழ்வதுமான அகன்ற கண்களைக் கொண்டவரே! கம்பீர சிங்க கர்ஜனையால் அனைத்து உலகங்களையும் நடுங்கச் செய்பவரே! உக்கிர வடிவான நரசிம்மரே! உம்மை நான் வணங்குகிறேன்.

ஸர்வை ரவத்யதாம் ப்ராப்தம்
ஸபலௌகம் திதே ஸூதம்!
நகாக்ரை சகலீசக்ரே
யஸ்தம் வீரம் நமாம்யஹம்!!

பொருள்: 
திதியின் மகனும், கொடிய அரக்கனுமான இரண்யன், உலகத்தில் எவராலும் தன்னை கொல்ல இயலாது என ஆணவத்துடன் திரிந்தான். அவனைத் தன் நகத்தால் கிழித்து எறிந்த வீரம் மிக்கவரே! உம்மை நான் வணங்குகிறேன்.

பதா வஷ்டப்த பாதாளம்
மூர்த்தா விஷ்ட த்ரிவி டபம்!
புஜ ப்ரவிஷ்டாஷ்ட திசம்
மஹா விஷ்ணும் நமாம்யஹம்!!

பொருள்: 
விஷ்ணு கீழுள்ள பாதாள உலகம் வரையுள்ள திருவடியையும், மேலுள்ள தேவலோகம் வரையுள்ள திருமுடியையும் கொண்டிருக்கிறார். அவரது கைகளும், தோள்களும் எட்டுத் திசைகளிலும் பரவியுள்ளன. விஸ்வ ரூபம் கொண்ட அந்த நரசிம்மரை நான் வணங்குகிறேன்.

இங்கு கொடுக்கப்பட்டுள்ள ஸ்லோகத்தை  தினமும் மாலை வேளையில் படித்துவரவும் சாவால்களை வெல்லவும்.

Post a Comment

0 Comments