தமிழகத்தில் 6 மருத்துவ கல்லூரிகள் துவங்க அறிவிப்பு!

தமிழ்நாட்டில் மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கையை அதிகரித்து வந்த  நீண்டநாள் பேச்சுவார்த்தை இனி  செயல்வடிவம் பெறவுள்ளது.  தமிழகத்தில் தற்போது உள்ள மருத்துவ கல்லூரிகளோடு புதிதாக மேலும் 6 கல்லூரிகள் தொடங்கப்படவுள்ளன. 
 
தமிழகத்தில் தற்போது மருத்துவ கல்விக்கான முக்கியத்துவங்கள் அதிகமாக வளர்கிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது 6 புதிய மருத்துவ கல்லூரிகள் தமிழகத்தின் 6 மாவட்டங்களில் தொடங்கப்பட்ட இருக்கின்றன. இவைகள் குறித்து ஏற்கனவே அரசு ஆலோசித்து வந்தது குறிப்பிடத்தக்கது ஆகும்.

மத்திய அரசின் ஒப்புதல் பெற்று இந்த கல்லூரிகள் புதிதாக நிறுவப்பட இருக்கின்றன. இந்த புதிய கல்லூரிகள் தமிழ்நாட்டின் முக்கிய  மாவட்டங்களான  திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் நிறுவப்பட்ட இருக்கின்றன.

 
 
மருத்துவ கல்லூரிகள் ஒவ்வொன்றும் ரூ. 325 கோடி பொருட்செலவில் அமைக்கப்படவுள்ளன. இதனை மத்திய மற்றும் மாநில அரசுகள் பகிர்ந்து கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய கல்லூரிகளின் தொடக்கம் தமிழகத்தில் மருத்துவ கல்வியினை மேம்படுத்த உதவும்.  மருத்துவம் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.  மருத்துவப் படிப்புக்கான முக்கியத்துவம் மேலும் அதிகரிக்கும்.

Post a Comment

0 Comments