பருவ மழை தீவிரம் கேரளா, கர்நாடகாவில் கன மழை!

கேரளாவில் கன மழை பெய்து வருகின்றது. வீடுகளில் மழை நீர் புகுந்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பருவமழையால், ஏற்பட்ட பாதிப்பை போல் இவ்வாண்டும் இந்நிலையில், தற்போது, மீண்டும் இவ்வாண்டும் மிகுந்த பாதிப்பை தருமோ என அஞ்சசப்படுகின்றது. கன மழையால் மீண்டும் வெள்ளப் பெருக்கு ஏறபடுமோ என கேரள மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். 50 பேர்க்கு மேல் மக்கள்  காயமடைந்துள்ளனர்.

கேரளாவில் கடந்த இரு நாட்களாக திருவனந்தபுரம், கொல்லம்,  ஆழப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கனமழையால், வயநாடு, மலப்புரம், கோழிக்கோடு போன்ற பகுதிகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. கேரள மாநிலத்திலுள்ள 14 மாவட்டங்களில், 9 மாவட்டங்களுக்கு "ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக 24 இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.



கனமழை காரணமாக ஏற்கனவே வட மாநிலங்கள்  வெள்ளத்தால் தவித்து நின்றது குறிப்பிடத்தக்கது.  மேலும் கர்நாடாகவில் தற்பொழுது அணைகள் நிரம்பி வழிகின்றன.   பருவ மழையானது இன்னும் தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு  பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆந்திராவையும் கன மழையானது விட்டுவைக்கவில்லை
 மழைகாலத்தில் பெய்யும் நீரை சேமிக்க அரசு தரப்பில் விழிப்புணர்வு மக்களிடையே பரப்பட்டு வருகின்றது.

Post a Comment

0 Comments