படிக்கும் வயதில் பட்டப்பகலில் பட்டாகத்தியுடன் மோதும் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள்!

சென்னை அரும்பாக்கத்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் இடையே ஏற்பட்ட பயங்கர மோதலில் 7 மாணவர்களுக்கு அரிவாள் வெட்டு ஏற்பட்டுள்ளது. படிக்கும் வயதில் பட்டாக்கத்தி எடுக்கும் மாணவர்கள், பதட்டத்தில் சென்னை அரும்பாக்கம்.

சென்னை அரும்பாக்கம் அருகே சென்று கொண்டிருந்த மாநகராட்சி பேருந்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பயணம் செய்துவந்துள்ளனர்.பேருந்தில் பயணித்து வந்த இரு தரப்பு மாணவர்களிடையே கருத்துப் பரிமாற்றம் நிகழ்ந்துள்ளது. இதில் தாங்கள் மறைத்து வைத்திருந்த பட்டாக்கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களால் ஒரு தரப்பினர் மற்றொரு தரப்பினரை சரமாரியாக தாக்கினர்.



ரவுடிகள் போல் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்ட சம்பவத்தை பார்த்த பொதுமக்கள் மற்றும் சக கல்லூரி மாணவர்கள் அலறி அடித்து ஓடினர். இதில் வசந்த் என்ற மாணவரை சாலையில் ஓட விட்டு விரட்டி சென்று வெட்டியுள்ளனர்.  இந்த பயங்கர மோதலில் 7 மாணவர்களுக்கு அரிவாள் வெட்டு ஏற்பட்டுள்ளது. அரிவாள் வெட்டியதில் காயம் அடைந்த மாணவர்கள் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முறையான வழிகாட்டுதல்கள்:
இன்றைய தலைமுறையினரிடையே  பெருகி வரும் வன்முறைப் போக்கு ஆயுத ஏந்தும் போக்கானது சரியான வழிக்காட்டுதல்கள் இல்லாததுவே காரணமாகும்.  உயர்க்கல்வியின் அருமைப் பெருமைகளை அறியாத மாணவர்களின் இந்த மூர்க்க  குணங்களால் அவர்கள் வாழ்க்கையே கேள்விகுறியாகிவிடும் அபாயம் உள்ளது.

மேலும் சென்னையில் கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்டு வரும் மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது சாதரண ரயில் மற்றும் பேருந்துகளில் பயணிக்கும் பொதுமக்களை அச்சுறுத்துகின்றது. வருங்காலத் தலைமுறையினாரான மாணவர்கள் நடந்து கொள்ளும் போக்கு, பெற்றோர்களை பெரிதும் அச்சமடைய செய்துள்ளது. சமுதாயத்தின் கட்டமைப்பை கேள்விகுறியாக்கிவுள்ளது.
ரூட்  தலைவர் பதவிக்குச் சண்டை:
பேருந்து மற்றும் ரயில்களில் ரூட் தல யார் என்பதில் இது போன்ற மோதல்கள் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அதனால், மாணவர்கள் கல்லூரி சென்று வரும் நேரத்தில் சென்னை முழுவதும் ரயில் மற்றும் சாலைகளில் அதிகளவிலான போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

தண்டனைகள் கடுமையானதாக்கப் பட வேண்டும். மாணவர்கள் வருங்காகலத்தினை கருத்தில் கொள்ளாமல்  வன்முறையில் ஈடுபட்டால் படிப்பானது பறிப்போகும் என்ற அச்சம்,  மற்றும் எதிர்காலம் குறித்தப் பயம் இருக்குமானல் இவ்வாறு செயலில் ஈடுப்பட மாட்டார்கள். 
பெற்றோர்களுக்கு இது குறித்து தெரிவிக்கப்பட்டு அவர்களிடம் எச்சரிக்கை செய்து மாணவர்களை கண்கானிக்க வேண்டும். பிரச்சனைகளில் ஈடுப்பட்ட மாணவர்களை கண்டுபிடுத்து , படிப்பு காலம் முடியும் வரை அப்சர்வேசன் எனப்படும் கூர்ந்த கவனத்தில் வைக்க வேண்டும். இதன் மூலம் அடுத்து வரும் மாணவர்களுக்கும்  பயன் மற்றும் விழிப்புணர்வு, பொறுப்புணர்வு தானாகவே கிடைக்கபெற்று வன்முறைகள்  நடக்காது தடுக்கப்படலாம். 

Post a Comment

0 Comments