தோனியின் இரண்டு மாத ராணுவப் பயிற்சி காஷ்மீரில்!

இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த வீரர் மற்றும் கூல் கேப்டன் என்ற பெருமையை தன்னக்கத்தே கொண்ட தலைச்சிறந்த தலை நம்ம தலை தோனி, இந்திய அணி பங்கேற்ற உலக கோப்பை போட்டியில் அறையிறுதிப் போட்டியில் தோற்று வெளியேறியது. இதன்பின் அணிக்கு ஏற்பட்ட விமர்சனங்கள், ஊடக திறனாய்வுகளுக்கிடையே இந்திய அணி தனது அடுத்தப் பயணத்தை மேற்கிந்திய தீவுகளில் தொடங்குகின்றது. இந்நிலையில்  மகேந்திரசிங் தோனி இரண்டு மாதம்  ஒய்வு கேட்டுள்ளார். பிசிசிஐ  தேர்வுப் பட்டியலிலும் தோனி பெயர் இடம் பெறவில்லை.

இந்திய கிரிக்கெட் அணி வீரர் தோனி 2 மாதங்கள் ராணுவ பயிற்சிகளில் கலந்து கொள்ள இருக்கும் நிலையில், அவருக்கு அதற்கான அனுமதியை ராணுவத் தலைமை தளபதி பிபின் ராவத் வழங்கியுள்ளார். இதன் மூலம் பயிற்சி பெறலாம்.
 




கிரிக்கெட்டில் அடுத்தடுத்தப் போட்டிகளில்  இந்திய அணியில் தோனிக்கான இடம் கிடைக்குமா? என்பது மிகப் பெரிய கேள்வியும் எழுந்தன.  இதற்கிடையில் மேற்கிந்தியத்தீவுகள் கிரிகெட் தொடரில் இந்திய அணி மோதவுள்ள  நிலையில், 2 மாதங்கள் ராணுவ பயிற்சிக்கு செல்ல இருப்பதாக தோனி, பிசிசிஐக்கு கடிதம் எழுதினார. தோனியின் கடிதத்தால், மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் அவர் விளையாட மாட்டார் என்பது உறுதியானது.
 
2 மாதங்கள் தோனி ராணுவப்பயிற்சி பெறுவதற்கு தலைமை தளபதி பிபின் ராவத் ஒப்புதல் அளித்துள்ளதை அடுத்து ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தோனி பயிற்சி மேற்கொள்ள இருக்கிறார். இந்திய அணியின்  மகேந்திர சிங் தோனிக்கு 2011-ம் ஆண்டு ராணுவத்தின் கவுரவ லெப்டினன்ட் கேணல் பதவி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்திய கிரிக்கெட் அணின் முன்னாள் கேப்டன் மற்றும் மிஸ்டர் கூல் என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுபவர் தோனி. சமீபத்தில் இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் தோனி சிறப்பாகவே செயல்பட்டார். ஆனாலும் அவர் மீது பலரும் விமர்சனங்களை முன்வைத்தனர்

வெஸ்ட் இண்டீஸ் தொடரிலிருந்து மட்டும் விலகுவதாக தோனி கூறியுள்ளார். அதனால் அடுத்த இரண்டு மாதத்திற்கு இந்திய ராணுவத்துடன் இணைந்து பயிற்சி பெற இருக்கிறார்.

தோனிப் போன்ற சிறப்பான வீர்களுக்கு முன் மரியாதை என்பது போற்றப் படக்கூடியது.  அவரை விமர்சிக்கும் முன்பு அவரது சாதனையையும் நாம் மனதில் கொள்ள  வேண்டும். யார் என்ன வேணாலும் சொல்லுங்க எங்க தல  தோனி எப்பவும் எங்களுக்கு மாஸ்தான் என்கின்றனர் ரசிகர்கள்.

Post a Comment

0 Comments