கொச்சின் சிப்யார்டு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

தென்னிந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான கொச்சியில் மிகவும் பிரபலான கொச்சி ஷிப்யார்டு லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.  கப்பல் கட்டும் தளத்தில் அசிஸ்டென்ட் (எச்.ஆர்.,) பணியிடங்களுக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.
 
கப்பல் கட்டும் தளத்தில் அறிவிக்கப்பட்டுள்ள அப்ரென்டிஸ் பிரிவில் காலியாக உள்ள பணியிடங்கள் மொத்தம் 30 இடங்களை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்கலாம்.
 
 25.7.2019 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 25 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.


கல்வித் தகுதியாக அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பை குறைந்தபட்சம் 75 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். எம்.எஸ்., ஆபிஸ் தொடர்புடைய பேக்கேஜ்களில் நல்ல திறன் தேவைப்படும்.
 
இப்பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியானவர்களுக்கு  மாதம் ரூ.10 ஆயிரத்தை ஸ்டைபண்டாகப் பெறலாம்.
 
அப்ஜெக்டிவ் வகையிலான ஆன்லைன் எழுத்துத் தேர்வு மூலம் தேர்வு இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. செலுத்த வேண்டும். 

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இறுதி தேதி  ஜூலை 25, 2019 ஆகும். 

மேலும் தேவைப்படும் தகவல்களைப் பெற அதிகாரப்பூர்வ தளத்தின் மூலம் அறியலாம். https://www.cochinshipyard.com/  


மேலும் படிக்க:

Post a Comment

0 Comments