ஹிமாவின் தொடரும் தங்கவேட்டை தடகளப் புயல் !

இந்தியாவின் வடக்கிழக்கில்  இருந்து வந்ததொரு புயல், அது உலகமெங்கும் வெல்கின்றது தங்கம். வடக்கிழக்கில் இருந்து வந்ப் பெண் புயல் ஹிமாதாஸ் 19 வயது நிறைந்த இளம் இந்தியப் பெண்.  டபோர் தடகளப்போட்டியில் இந்தியாவின் தடகள வீராங்கனை ஹீமா தாஸ் சிறப்பான செயல்பாடுகளால் 19 நாட்களில் 5 தங்க பதக்கங்களை வென்று இந்தியாவுக்கு பெருமை தேடி தடகள விளையாட்டின் வரலாற்றில் இடம் பெற்று சாதனை படைத்து வருகின்றார்.

கட்ச் குடியரசு நாட்டின் டபோர் நகரில் நடந்து வரும் தடகளப் போட்டியில் இந்தியாவின் 19 வயது இளம் ஹீமா தாஸ் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 52.09 வினாடிகளில் கடந்து தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார்.  இதுவரை  இந்தியாவுக்க்கு இந்த வெற்றி கிடைக்காமல் தண்ணீ காட்டி வந்தது  ஹீமா வந்ததும் எல்லாம் மாறிவிட்டத்து.

கடந்த ஜூலை 2ம் தேதி போஜான் தடகள கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் 200 மீட்டர் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற ஹீமா தாஸ்,  தொடர்ந்து குட்னோ, கிளாட்னோ மற்றும் தற்போது டபோர் நகரில் நடந்த தடகள போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார். 



ஆகவே ஜூலை 2- ஜூலை 20 ஆகிய 19 நாட்களில் ஹீமா தாஸ் 5 தங்கப் பதக்கத்தை வென்று இந்தியாவுக்கு பெரிய கெளரவத்தைப் பெற்று தந்துள்ளார். இது தேசியத்தின் புதியதொரு எழுச்சி, உலக நாடுகளின் வீரர்களுக்கு இதனால் ஏற்படும் ஒரு தளர்ச்சி தவிர்க்க முடியவில்லை.

ஹிமா  2020இல் ஜப்பானில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் விளையாட தகுப் போட்டியில் வெல்வதின் மூலம் ஒலிம்பிக்கில் ஹிமா நிச்சயம் ஒளிர்வார்.

வளர்ந்த உருவம், தெரிக்கவுடும் சுறுசுறுப்பு,  தெளிவான இலக்கு என மிரட்டுக்கிறார் ஹிமாதாஸ்.   தேசியப் பெண்களுக்கெல்லாம் பெருமிதம் கிடைத்துள்ளது. ஹிமாவின் வெற்றி ஒவ்வொரு இந்தியனின் வெற்றியாகும்.

மேலும் படிக்க:

Post a Comment

0 Comments