தடகள தங்க வீராங்கனை ஹீமா தாசை யுனி செப் இந்திய இளைஞர்களின் தூதராக அறிவித்துள்ளது. உலக தடகள யு- 20 சாம்பியன்சிப் மகளிருக்கான 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தை வென்ற முதல் இந்திய வீராங்கனை சாதனையை அங்கிகரித்து இந்திய அரசு அவருக்கு 2018 ஆம் ஆண்டிற்கான அர்ஜூனா விருது வழங்கியது .
ஆசிய விளையாட்டு போட்டியை 50.79 விநாடியில் வென்று வெள்ளிப் பதக்கத்தை வென்றார். 20 வயதுக்குட்பட்டோர்க்கான தடகள கழகத்தின் ஓட்டப்பந்தயத்தில் தங்கப் பதக்கத்தினை 18 வயதான ஹிமாதாஸ் வென்று சாதித்தவர்ஆவார்.
தந்தை பெருமிதக்கும் தங்க மகள்:
தந்தை பெருமிதத்து கூறும் தங்க மகள் சிறுவயதிலே தைரியசாலி வயலில் எனக்கு உதவி செய்வது, என்னை மருத்துவரிடம் அழைத்துச் செல்வது குறித்த அனைத்து உதவிகளை தானாக முன்வந்து செய்வது என் மகளின் துணிகரமாகும். ஹிமாவின் தந்தை ரஞ்சித்தாஸ் பெருமிதப்பட்டிருக்கின்றார்.
திருப்பங்கள் நிறைந்த ஹீமா:
ஹிமா துணிகரமும் தைரியமும் நிறைந்த பெண், ஹிமாவின் வெற்றி வாழ்க்கை திருப்பங்கள், போராட்டங்கள் சோதனைகள் கடந்து ஜொலிக்கின்றது இன்று.
ஒரு நாளைக்கு மூன்று அல்லது நான்கு மணி நேரம் மட்டுமே மின்சாரம் கிடைக்கும் குக்கிராமத்தில் வளர்ந்தவர் ஹிமா. தரமான மைதானமோ வேறெந்த அடிப்படை வசதியும் இல்லாத சூழலில் தன் திறனை வளர்த்தவர் ஹிமாதாஸ்.
கால்நடை மேய்ச்சல் நிளத்தில் ஆண்டுக்கு மூன்று மாதங்கள் மழை நீரால் சூழ்ந்திருந்த மைதானம் தான் இந்திய தடகள மங்கை ஹிமாவை உருவாக்கியது. இவரை யுனிசெப் கௌரவப்படுத்தி யுனிசெப் தன்னை கௌரவப்படுத்திக் கொண்டது என்றுதான் கூற வேண்டும்.
சாதிக்கத் துடிப்பவர்களுக்கு ஹீமாவே சிறந்த ரியல் ஹீரோயினி என்பதில் மாற்றுக்கருத்திருக்க முடியாது. மாடுகள் மேயும் மைதானத்தில் கல், முல்லை காலுக்கு மெத்தையாக்கி கனவை நிஜமாக்கிய தங்க மங்கையே நீயே உனக்கு நிகர் வாழ்த்துக்கள் ஹீமா வாழ்க வளமுடன்.
வாழ்க்கையில் சாதிக்க நினைப்பவர்கள் ஒரு முறை சலித்துக் கொள்ளாமல் ஹீமாவை திரும்பி பார்த்து பயணித்துப் பாருங்கள் காட்டாற்று வெள்ளமெல்லாம் காலுக்கடியில் நிற்கும் அதனை மனதில் கொண்டு யுனிசெப் அவரை அங்கிகரித்துள்ளது.
தங்க தாரகை ஹீமாவை ரோல் மாடலாக கொண்டு இந்தியாவில் ஹீமாக்கள் வருவார்கள் என்பது உறுதி.
0 Comments