கஜா புயல் தற்பொழுதைய நிலவரப்படி 21 கி.மீ வேகத்தில் கஜா புயல் நகர்ந்து வருவதாக சென்னை மண்டல வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நகையில் 187 கிமீ தொலைவில் கஜா புயல் நிலைகொண்டுள்ள்தாக அறிவிக்கப்பட்டத்தை அடுத்து திருச்சி பாரதிதாசன் மற்றும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் நாளை நடக்க இருந்த தேர்வுகள் தேதிகள் தெரிவிக்கப்படாமல் ஒத்தி வைப்பு.
ரயில்கள் நிறுத்தம்:
கஜா புயலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிகையாக சென்னை எழும்பூரிலிருந்து காரைக்காலுக்கு செல்லும் வேளாங்கன்னி ரயில், தஞ்சாவூர் உழவன் மற்றும் மன்னாகுடி விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் தாம்பரத்திலிருந்து நெல்லை செல்லும் ரயில், விருத்தாச்சலம் வழியாக இயக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கஜாபுயலின் தாக்கம் குறித்து முன்னெச்சரிக்கையாக செயல்பட ராமேஸ்வரம், கன்னியாகுமரி ரயில்கள் சிவகங்கை மாவட்ட மானாமதுரை ரயில்கள் இடையிலேயே நிறுத்துவதாக ரயில்வே நிர்வாகம் முடிவு.
கடலூர் மாவட்ட பொது மக்கள் தொடர்பு கொள்ள 7305715721 வாட்ஸ் அப் எண் மூலம் கஜா புயலின் விவர்ங்கள் இடர்பாடுகளின் தகவல்கள் பெறலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்தள்ளது.
புதுச்சேரி:
புதுச்சேரியில் கஜா புயல் தாக்கம் கருதி அரசு ஊழியர்கள் பள்ளி மாணவர்கள் முன்னாதாக பணி, பள்ளி முடித்து செல்ல அரசு அறிவிப்பு.
0 Comments