தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வந்தனர். பொதுமக்கள் காலிக் குடங்களுடன் அலைந்து திரிகின்றனர். மழையும் இல்லை. ஆக்கிரமிப்புகளுடன் மிகுந்த உள்ளாகின்றனர்.
கல் குவாரிகள், ஆழ்துளைக் கிணறுகள் உள்ளிட்டவற்றில் இருந்து மக்கள் தண்ணீர் பெற்று வருகின்றனர்.
சென்னையின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய, ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வரப்படும் என்று முதல்வர் அறிவிப்பின்படி ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தன.
ரூ.65 கோடி மதிப்பீட்டில், மேட்டுசக்கர குப்பத்தில் இருந்து ஜோலார்பேட்டை ரயில் நிலையம் குழாய்கள் பதிக்கப்பட்டன. இன்று காலை தண்ணீர் ரயில் நிலையம் வந்து சேர்ந்தது. அவற்றை ரயில்களில் ஏற்றி, சரியாக 7 மணிக்கு ஜோலார்பேட்டையில் இருந்து புறப்பபட்டது.
தண்ணீர் ரயிலை முக்கிய அதிகாரிகள் கொடி அசைத்து தொடங்கி வைக்க. ரயிலில் ஒரு வேகனில் 54,000 லிட்டர் தண்ணீர் நிரப்பப்பட்டது. மொத்தமாக ஒரு ரயிலில் 27 லட்சம் லிட்டர் தண்ணீர் கொண்டு வரப்பட்டது.
இது சென்னை மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் இனி வரும் காலத்தில் சென்னையில் மழை வரும் என்ற வெதர்மேன் கணிப்புகளும் சென்னைக்கு தற்பொழுது ஆறுதல் அளித்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments