இந்திய ராணுவ பாதுகாப்புப் படையானது உலகின் மிக முக்கியமான படையாகும். பாதுகாப்பு படையில் பணியாற்றும் வீரர்கள் நாட்டின் நிஜ கதாநாயகர்களாக மக்கள் மனதில் என்றும் போற்றுதலுரிக்குரிய இடத்தினைப் பெற்றுள்ளனர். பெருமை மிக்க இந்திய ராணுவத்தில் என்.சி.சி பிரிவில் காலியிடங்கள் நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது.
என்.சி.சியில் ஆண் மற்றும் பெண் இருபிரிவிலும் மொத்தம் நிரப்படவுள்ள சிறப்புப் பணியிடங்கள் 55 அறிவிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள வயதானது 1.1.2020 அடிப்படையில் 19 முதல் 25 வயது உடையவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் ஆவார்கள். அதாவது 2.1.1995க்குப் பின்னரும், 1.1.2001க்கு முன்னரும் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதியாக அங்கீகரிக்கப் பட்ட கல்வி நிறுவனத்தில் ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். விண்ணப்பத்தாரர்கள் குறைந்த பட்சம் 50 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இந்திய ராணுவத்தில் என்.சி.சி பிரிவில் தகுதி அடிப்படையில் பரிசீலிக்கப்பட்டு, எஸ்.எஸ்.பி., இன்டர்வியூ, உடல் தகுதித் தேர்வு, மருத்துவத் தகுதித் தேர்வு முறையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆன்லைனில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.
இந்திய ராணுவத்தில் விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள கடைசி நாள் : 2019 ஆகஸ்ட்., 8. ஆகும்
மேலும் தேவைப்படும் விபரங்களுக்கு : http://joinindianarmy.nic.in/hentication.aspx
கொடுக்கப்பட்டுள்ள லிங்கினை கிளிக் செய்து விண்ணப்பிக்கவும்.
மேலும் படிக்க:
மேலும் படிக்க:
0 Comments