மழை நீரில் மிதக்கும் வட மாநிலங்கள் ஸ்தம்பிக்கும் மக்கள்!

வட மாநிலங்களில் தொடர்ந்து பெய்யும் மழையில் மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். அன்றாட பணிகள் செய்ய தாமதமாவதுடன் போக்குவரத்தில் தாமதம் என மழை மக்களை புரட்டி எடுக்கின்றது.  தண்ணீர் தேக்கங்களால் கொசுத் தொல்லை, நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.  வட இந்தியாவில் உத்திரப்பிரதேசம்  ராஜஸ்தான், பீகார்,  மகாராஷ்டிரா, அஸ்ஸாம் போன்ற மாநிலங்களில் வெள்ளப் பெருக்கெடுத்து நீர் சூழந்துள்ளது

தொடர் மழை, வெள்ளதால், பெரும்பாலான வடமாநிலங்கள் தத்தளித்து வருகின்றன. இந்தியாவில் வடக்கு , கிழக்கு மற்றும் வட கிழக்கு மாநிலங்கள் மழையால் பெரிதும் பாதிப்படைந்துள்ளன. இதனால் லட்சக்கணக்கான மக்கள் வாழ்வாதரங்கள்  பாதிப்படைந்துள்ளன. அன்றாட அலுவல்களிலும் தொய்வு ஏற்பட்டுள்ளது. 



இரண்டு  நாட்களுக்கு மழை உண்டு ராஜஸ்தானில்!..
வடமாநிலங்களில் தென் மேற்கு பருவமழையின் தீவிரத்தால் ராஜஸ்தான் மாநிலத்தில், பல மாவட்டங்களில், இரண்டு நாட்களாக, தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. ராஜஸ்தானின்  கோடா மாவட்டத்தின் பல பகுதிகளில், வெள்ளம் சூழ்ந்துள்ளது. கோடாவில், மாவட்டத்தில் மட்டும் இன்று  காலை வரை, 152 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மாநிலத்தில், இன்னும், இரண்டு நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது, என  வானிலை மையம் அறிவித்துள்ளாதால் அரசு அனைத்துவிதமான நடவடிக்கைகளையும் எடுக்க  முடுக்கிவிட்டுள்ளது.

மஹாராஷ்டிராவில் இன்னும் 3 நாட்கள் மழை  வாய்ப்பு!
மஹாராஷ்டிரா மாநிலம், நாசிக் பகுதியில், தொடர்ந்து பெய்து வரும் மழையால், கோதாவரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது. கரையோர மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையில், மூன்று நாட்களுக்கு இடைவிடாமல் மிக பலத்த மழை பெய்யும் என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால்,  மக்கள் நெருக்கடி கொண்ட மும்ப்பை நகரம் நீரில் தத்தளிக்கவுள்ளது.

மும்பையில், கடந்த இரண்டு நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், மும்பை முழுவதும், சாலைகளில் வெள்ளம் போல், நீர் ஓடுகிறது. ரயில் தண்டவாளங்கள், மழை நீரில் மூழ்கியுள்ளன. இதையடுத்து, மும்பையில், ஐந்து ரயில்கள் ரத்து செய்யப்பட்டு, ரயில்களின்,  மார்க்கத்தில் மாற்றம் செய்து திருப்பி விடப்பட்டன.


வெள்ளத்தில் பீஹார் 1 கோடி பேர் பாதிப்பு:
பீஹார் மாநிலத்தில், மழை, வெள்ளத்தின் சீற்றம் தொடர்ந்து வருவதால். பீஹார் மாநிலத்தில், முக்கிய நதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளம் அபாய அளவை தாண்டி ஓடுவதால், 12 மாவட்டங்கள், தண்ணீரில் மூழ்கியுள்ளன. இங்கு, 80 லட்சத்துக்கும் அதிகமானோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மழையால் பீகாரில்  123 பேர் பலியாகியுள்ளனர். தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை, பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றும் பணியில், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் பீஹார் மாநில போலீசார் ஈடுபட்டுள்ளனர். பீகாரில் தொடர்ந்து பெய்த மழைக்கே ஒரு கோடி பேருக்கு மேல் பாதிக்கப்படுவார்கள், மேலும் பேரிடர் மேலாண்மைக்  குழு தேவைப்படும்.

பீஹாரின்  ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. வெள்ளத்துக்கு 100 கணக்கில் உயிர்பலி ஏற்பட்டுள்ளது. இறந்தவர்களின் குடும்பத்துக்கு, தலா, 4 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க, முதல்வர், நிதிஷ் குமார்  அறிவிப்பு செய்துள்ளார்.



உத்தர பிரதேசம் ஆறுகளில் வெள்ளம் உசாராகியது அரசு:
உத்தர பிரதேசத்தில், இரண்டு நாட்களாக, பல பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. கக்ரா, சாரதா, சரயு உட்பட, பல ஆறுகளில், வெள்ளம் பெருக்கெடுத்து கரைபுரண்டு ஓடுகின்றது. மாநில அரசு தகுங்த நடவடிக்கை எடுக்க  ஆணையிட்டுள்ளது.
 அஸ்சாமுக்கு உதவிய சீனா
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அஸ்சாமில், நீண்ட மழை ஓய்ந்தது. வெள்ள நீர் வடிய துவங்கியுள்ளது. பாதுகாப்பான இடங்களுக்கு குடிபெயர்ந்தவர்கள், வீடுகளுக்கு திரும்ப துவங்கியுள்ளனர். மாநிலத்தில் 82க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர்.

அஸ்சாமில் கடந்த 17-ம் தேதி வெள்ளப்பாதிப்பை அறிய இஸ்ரோ  சீனாவிடம் கோரியது. சீனாதான் முதன் முதலில் தனது கேவோபென் 2 செயற்கைக் கோள் பதிவு செய்த அசாமின் வெள்ள பாதிப்பு புகைப்படங்களை அனுப்பி உதவியது குறிப்பிட்டத்தக்கதாகும்.

Post a Comment

0 Comments