மும்பையில் கனமழை மக்கள் வீடுகளில் முடக்கம்!

மும்பையில்  சில இடங்களில் கனமழை காரணமாக  18 பேர் உயிரிழந்துள்ளது ஆபத்து நிலையை உணர்த்துகின்றது. மும்பையில் இன்னும் மூன்று நாள்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளதால் பள்ளி, கல்லூரி, அரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்கு இன்று பொதுன்விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகள் வாழும் மக்கள் தண்ணீரில் தத்தளிக்கின்றனர்.
கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பெய்துள்ளது மும்பையில்  பெய்து வருவதாக தகவல்கள்  தெரிவிக்கின்றன. சாலைகள் மற்றும் ரயில் தண்டவாளங்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கி, வெள்ள காட்சி அளிக்கின்றன. பஸ், ரயில் போக்குவரத்து தடைபட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மும்பையின் பல்வேறு பகுதிகளில் நேற்று 100 மிமீ மழை பெய்துள்ளது. மழை தொடர்பான விபத்துக்களில்  உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. 



வெள்ளத்தில் மிதக்கும் மும்பையில் மேலும் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கனமழை காரணமாக மும்பையில், அரசு, தனியார் கல்வி நிறுவனங்கள், அலுவலகங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசின் நடவடிக்கைகள் துரிதப் படுத்தப்பட்டுள்ளன.

அவசர சேவைகள்  கிடைக்கச் செய்து அறிவிப்பி இன்றும் கனமழை பெய்வதால் பொதுமக்கள், வீடுகளை விட்டு தேவையின்றி வெளியே வர வேண்டாம் என்று முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ்  வெளியிட்ட அறிவிப்பில்  வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Post a Comment

0 Comments