இந்தியாவின் 2019-2019 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் கலைக்கட்ட தொடங்கியுள்ளது!

2019-2020  ஆண்டிற்கான பட்ஜெட் உரையானது புதுடெல்லியில் பாராளுமன்றத்தில் காலை தொடங்கியது.  நாட்டின் இரண்டாம் பெண் நிதி அமைச்சரான நிர்மலா சீதாராம் காலையில் தொடங்கி   தாக்கல் செய்தார்.  பொது மக்களுக்கு பட்ஜெட் குறித்த சாராம்சங்களை இங்கு கொடுத்துள்ளோம். 

நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்குதலை  தொடங்குமுன் பட்ஜெட் நகலை சிவப்பு நிற துணிப் பையில் கொண்டு வந்து புதிய நடைமுறையில்  கொண்டு வந்தார்.

மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் இறக்குமதி வரியை 12% உயர்த்தப்பட்டுள்ளது. 

பெட்ரோல், டீசல் மீது வரியினை கூடுதலாக வித்துள்ளது. 

கோடிஸ்வரர்கள் மீது  சர்சார்ஜ் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி 5 கோடி மேல் வருமானம் சம்பாதிப்பவர்கள் 7 % கூடுதல் வரி செலுத்தப்பட வேண்டும். 

பொதுத்துறை வங்கிகளுக்கு 70,000 கோடி நிதி ஒதுக்கப்படும். 
மேலும் வங்கிகளின் வாராக்கடன்கள் ஒரு லட்சம் கோடிரூபாய் வரை வசூலிக்கப்பட்டுள்ளது. 

மேலும் இந்த அரசின் எல்இடி பல்புகள் பயன்பாட்டின் மூலமாக 341 கோடி மின் கட்டணைத்தை குறைத்துள்ளது என அறிவித்தார்.  35 கோடி எல்இடி பல்புகள் நாட்டில் உபயோகப்படுத்துகின்றது. அதன் மூலம் அரசு 18,341 கோடி சேமிக்கப்படுகின்றது. மேலும் மின்சார தேவையை சோலார் மூலம்   பூர்த்தி செய்ய சூரிய அடுப்புகள் பயன்படுத்த அரசு ஆதரவு நல்கும். 

இந்திய இளைஞர்களின் மேம்பாட்டுக்காக கல்வி, திறன் மேம்பாட்டுகு அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளது. 
இந்தியாவின் ஒரு கோடி இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கபடும் என அறிவித்தார். 

இந்திய இளைஞர்களுக்கான சர்வதேச அளவில் வேலைவாய்ப்பை பெற் இந்தியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்

நாட்டில் திறமையாளர்களின் எண்ணிக்கைய உயர்த்த விளையாட்டு திட்டத்தை விரிவாக்கப்படும். 

இளைஞர்களின் திறனை மெருக்கூட்ட தேசிய விளையாட்டு  கல்வி வாரியத்தின் மூலம்  மாணவர்களை திறன் வாய்ந்தவர்களாக்க உருவாக்கப்டுவார்கள். மேலும் உயர்கல்வித் துறையில் புதிய கொள்கை உருவாக்கப்படும்.  இந்தியா உயர்கல்விமையமாக மாறும் எனவும் அறிவிக்கப்பட்டது.  



நாட்டில் உள்ள  சாலைகள் சீரமைக்கப்பட்டு இடைவெளிகள் குறைக்கப்படும் என்றும் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments