ஆடி அமாவாசைசதுரகிரி தரிசனம் செய்யவுள்ள பக்தர்கள் கவனத்திற்கு!!!

சதுரகிரி மகாலிங்கம் கோவிலானது, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள ஒரு மலைக்கோயிலாகும். இக்கோயில் மதுரை மாவட்டம் சாப்டூர் அருகில் உள்ள வாழைத்தோப்பு பகுதியிலிருந்து, விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகில் உள்ள வத்திராயிருப்பு பகுதியிலிருந்தும், தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டம், வருசநாடு எனும் பகுதியிலிருந்தும் மலைப் பாதைகள் உள்ளன இத்தனை வழிகளில் பக்தர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.



இக்கோவிலுக்கு மதுரை, தேனி,  மக்கள் அவர்களவர்களுக்கு அருகில் உள்ள வழிகளைப் பயன்படுத்தி வருகின்றனர். மதுரை மாவட்ட மக்கள் வாழைத்தோப்பு பகுதி, சந்தையூர்  மலை  பகுதி மற்றும் வத்திராயிருப்பு பகுதி மலைப்பாதையையும், தேனி மாவட்ட மக்கள் வருசநாடு பகுதி வழியிலான மலைப்பாதையையும் பயன்படுத்துகின்றனர். இப்பாதைகளில் வத்திராயிருப்புப் பகுதியிலிருந்து செல்லும் பாதை கடினமற்றது என்பதால் விருதுநகர் மற்றும் தமிழகத்தின் பிற மாவட்ட மக்கள் இப்பாதையை அதிகமாக பயன்படுத்துகின்றனர். சதுரகிரி மலைப் பகுதியானது மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியாகும். இங்கு வனப்பகுதிக்குள் கோரக்கர்,சட்டைமுனி போன்ற சித்தர்கள் தவம் செய்வதற்காக, தத்துவ ஆராய்ச்சி செய்வதற்காகவும் இங்கு வாழ்ந்து வந்திருக்கிறார்கள் என  தகவல்கள் கிடைத்தன. 
ஆடி அம்மாவாசைகளில் பக்தர்கள் மன அமைதிக்காக இங்கு வழிபாடு நடத்த வருவது வழக்கம் ஆகும். சித்தர்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் இடங்களில் இதுவும்  ஒன்று என நம்படுகின்றது. அத்துடன் இம்மலையிலுள்ள மூலிகைகள் நோய்களை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டவையாகும். மேலும் இங்குள்ள சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம் கோயில்களில் சிறப்பு வழிபாடு செய்து பக்தர்கள் வழிபடுவது வழக்கமாகும்.
ஆடி அமாவாசையில் தர்பணம், பூஜை, குலத் தெய்வ பூஜை ஆகியவை வீடுகள் தோறும் நடைபெறும். அவ்வாறு ஆன்மீகப் பக்தர்களின் முக்கிய புகழிடங்களில் ஒன்று சதுரகிரி ஆகும். நாளை அமாவாசை நாள் சதுரகிரி செல்லும் பகதர்களுக்கு இதோ இந்த சிறிய தகவல் உதவிகரமாக இருக்கும் என்று நம்புகின்றோம்.

சதுரகிரி கோவில் 5.5 km தூரம் பயணித்துச் செல்ல வேண்டும். சுமார் உயரம் 3083அடி ஏறுவதர்க்கு சராசரி 2.45 மணி நேரமாவது ஆகும். இறங்குவதற்கு. 1.45 மணி நேரமாகின்றது.

பொதுவாக பக்தர்கள் சதுரகிரி மலை ஏற துவங்கும் காலை 4.00 மாலை 4.00 மணிவரை ஆகும். அம்மாவசைகளில் 4நாட்கள் பக்தர்கள் பயணிப்பார்கள், மேலும் பௌர்ணமிக்கு 4 நாட்களுக்கு வழிபாடுகள் நடக்கும்.

இந்த ஆண்டு ஆடி மாத அமாவாசைக்கு 6 நாட்கள் அனுமதியானது பக்தர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் எதிர்பாராத கன மழை பெய்தால் சதுரகிரி செல்ல அனுமதி மறுக்கப்படும்.

இவ்வாண்டு ஆடி அமாவாசைக்கு சதுரகிரி செல்லும் பகதர்களுக்கு மலை பாதைகளில் தண்ணீர், மோர், சோடா, சர்பத், பழங்கள் ஆகியவை மட்டும் பக்தர்களுக்கு கிடைக்கும். மேலும் சதுரகிரி செல்லும் பகதர்களுக்கு மலை மேல் 7 இடங்களில் அன்னதானமும், 5 இடங்களில். பிரசாதமும் வழங்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளன.


மலை பாதையில் 6 இடங்களில் இந்து அறநிலைதுறை சார்பாக தண்ணீர் தொட்டி_வைத்துள்ளார்கள், இதனைப் பகதர்கள் பயண் படுத்திக் கொண்டு பயன் பெறலாம். தண்ணீர் தொட்டி வைக்கப்பட்டுள்ள இடங்களின் விவரங்களை கிழே கொடுத்துள்ளோம்.


1.கருப்பு கோவில்
2.கோணதலவாசல் அருகே
3.கோரக்கர்குகை அருகே
4.,குளிராட்டி
5.சின்னபசுக்கடை
6.பச்சரிசிபாறை

மேலும் படிக்க:

Post a Comment

0 Comments