சென்னை நீதிமன்றத்தில் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு!

சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் அதன் கிளை நீதிமன்றங்களில் காலியாக உள்ள பணியிடங்கள நிரப்ப அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை 573 ஆகும். 
சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ள மேலாண்மைத் துறைக்கான தமிழக அரசு பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள்  கிழே கொடுத்துள்ளோம்.
கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் - 76 
டைப்பிஸ்ட் - 229 
உதவியாளர் - 119 
வாசிப்பாளர்/ஆய்வாளர் - 142 
ஜெராக்ஸ் ஆப்ரேட்டர் - 07 
கல்வித் தகுதியாக இப்பணியிடங்களுக்குக் குறைந்தபட்சமாக ஏதேனும் ஓர் துறையில் இளநிலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். வாசிப்பாளர் மற்றும் ஆய்வாளர், ஜெராக்ஸ் ஆப்ரேட்டர் உள்ளிட்ட பணிகளை தவிர மற்ற பணிகளுக்குக் கணினி தொடர்பான சான்றிதழ் படிப்பு அவசியம். கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர், தட்டச்சர் பணிகளுக்குத் தட்டச்சு சான்றிதழ்  பெற்றிருக்க வேண்டும். 
வயது வரம்பாக பொது பிரிவினர் ஜூலை 1, 2019 அன்று 18 வயது முதல் 30 வயது வரை உள்ளவராக இருக்க வேண்டும். 
எஸ்.சி, எஸ்.டி, ஓபிசி பிரிவினர் ஜூலை 1, 2019 அன்று 18 வயது முதல் 35 வயது வரை இருக்க வேண்டும். ஏற்கெனவே உயர்நீதிமன்றத்தில் பணிபுரிபவராக இருந்தால் 18 வயது முதல் 45 வயது வரை இருக்கலாம்.
 இப்பணிகளுக்கு மாதச் சம்பளமாக பணியிடங்களுக்கு ஏற்ப மாறுபடும்.
 இருக்கும். 
 கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் - ரூ.20,600 முதல் ரூ.65,500 வரையில் வழங்கப்படும்.
 டைப்பிஸ்ட் - ரூ.19,500 முதல் ரூ.62,000 வரையில் வழங்கப்படும்.
 உதவியாளர் - ரூ.20,000 முதல் ரூ.63,600 வரை
வாசிப்பாளர்/ஆய்வாளர் - ரூ.19,500 முதல் ரூ.62,000 வரையில் 
ஜெராக்ஸ் ஆப்ரேட்டர் - ரூ.16,600 முதல் ரூ.52,400 வரையில்  பெறலாம்.
விண்ணப்பக் கட்டணமாக பொதுப் பிரிவினருக்கு ரூ.300 செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. மற்றும் மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பதாரர்களுக்குத் தேர்வுக் கட்டணம் கிடையாது. 
முதலில் எழுத்துத் தேர்வு நடைபெறும். பின், திறன் அறியும் தேர்வு மற்றும் வாய்மொழித் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 
 சென்னை உயர்நீதிமன்றம், உயர்நீதிமன்ற மதுரை கிளை அல்லது சென்னை உயர்நீதிமன்றத்தின் கீழ் செயல்படும் மாவட்ட நீதிமன்றங்கள் ஆகியவற்றில் பணி நியமனம் இருக்கும். 
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசி  தேதி 2019 ஜூலை 31 தேர்வுக்கட்டணம் செலுத்த கடைசி நாள் : 2019 ஆகஸ்ட் 2

 https://www.mhc.tn.gov.in/recruitment/login என்னும் இணையதள முகவரியின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

மேலும் படிக்க:

Post a Comment

0 Comments