ஆடி மாதம் அம்மனுக்குரிய மாதம், ஐஸ்வர்யம் அருள் பெறலாம் வாங்க!!..

ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு உகந்த மாதம். ஆடி வெள்ளிக்கிழமைகளில் அம்மன் அருள் பரிப்பூரணமாக கிடைக்க எளிமையாக அனுஷ்டிக்க கூடிய முறையினை இங்கு கொடுத்துள்ளோம். இதனை பக்தர்கள் பயன்படுத்தி பின்ப்பற்றி  அம்மன் அருள் கிடைக்கப் பெறலாம்

ஆடி வெள்ளிகிழமை விரத முறையானது மிகவும்  சிறப்புமிக்கது. திருமணமான ஆண்கள் பெண்கள் இருவரும் பின்பற்றலாம். ஆண்கள் வெள்ளி கிழமைகளில் வீடு மற்றும் கோவில்களுக்கு சென்று வரலாம். 


ஆடி மாதங்களில் பிரம்ம முகூர்த்த காலத்தில் எழ வேண்டும் இவ்வாறு செய்தால் ஐஸ்வர்யம் கிட்டும் என்று சொல்லப்படுகின்றது. அதிகாலை 4 முதல் 6 மணிக்குள் எழ வேண்டும்.  எழுந்தவுடன் குளிக்க வேண்டும். ஆடி மாதம் முழுவதும் மஞ்சள் பூசி பெண்கள் குளிப்பது சிறப்பானது ஆகும்.

ஆடி வெள்ளியில் பூஜை செய்ய, வீட்டில் முன் தினம் பூஜை அறை முழுவதும் சுத்தம் செய்து வைக்க வேண்டும். மஞ்சள் பிள்ளையாரை பூஜை அறையில் பிடித்து வைத்து ஆடி வெள்ளிக்கிழமைகளில் பூஜை செய்யலாம்..

ஆடி வெள்ளியில் தானம்:
ஆடி வெள்ளியில் தானம் செய்தல் சிறப்பானது ஆகும். நவசக்தி கொண்ட தாயின் அருள் பெற வேண்டுமெனில் 9 பொருட்களை கொண்டு தானம் செய்தல் சிறப்பானது ஆகும். 


சிறு பெண் குழந்தையை அம்மானாக பாவித்து வீட்டிற்கு அழைத்து வெற்றிலை, பாக்கு, மஞ்சள், துணி, தோடு, சீப்பு, வளையல், முடிந்த தொகை, குங்குமம் ஆகியவற்றை வைத்து  கொடுக்க வேண்டும். அம்மனுக்கு சாற்றுவதுபோல் குழந்தைக்கு உண்ண ஏதேனும் இனிப்பு பலகாரங்கள் படைக்கலாம்.   பூஜையின் போது லலிதா சக்ஸரநாமம் பாராயணம் செய்து வரலாம். 
ஆடிமாதங்களில் கூழ் செய்து அம்மனுக்கு படைத்து அனைவருக்கும் வழங்கலாம். அது சிறப்பு மிக்க அம்மனுக்கு  உரியது ஆகும்.
 அடி முதல் வாரம் லலிதா பரமேஸ்வரி, 
காமாட்சி கும்பிடவும். கலசம் வைத்தும் அம்மனாக சேவித்து கும்பிடலாம். வாசனை மலர் அர்ச்சனை லலிதா சஹஸ்ர நாமம் ஸ்தோத்திரம் சொல்லி தாம்பூலம் ரவிக்கை தானம் செய்வது சிறப்பு.

ஆடி 2 வது வாரம்:
துர்கை சமயபுரம் அம்மன் வழிபாடு சுண்டல் நெய்வெத்தியம் சிறப்பு.
கஞ்சா மால ஸ்தோத்திரம் சொல்ல வேண்டும் வாசனை மலர் அர்ச்சனை செய்து முடிவு செய்யவும்.

ஆடி 3  வது வாரம்:
 சரஸ்வதி தேவிக்கு குழந்தைகள்  வைத்து செய்தல் கல்வி அறிவு கிட்டும். பருப்பு மஞ்சள் சேர்த்து வெண் பொங்கல் படைத்து சரஸ்வதி அஷ்ட ஸ்தோத்திரம் படிக்கவும். கல்வி உபகரணம் தானம் செய்யலாம்.

ஆடி 4வது வாரம்:
 லட்சுமி நோன்பு இரண்டு, மூன்று வது வாரம் சேர்த்து கும்பிட்டு சர்க்கரை பொங்கல் படைப்பது விசேஷம். சிவப்பு பூக்கள் அர்ச்சனை செய்து வரவும்.

ஆடி ஒவ்வொரு வெள்ளியும் இதை செய்து அம்மனின் அருள் பெற்று   பெரு வாழ்வு வாழ வேண்டுகிறோம்.

WRITTEN BY RMP KOKILA AND SHOBANA

Post a Comment

0 Comments