நாடு முழுவதும் களை கட்டியது கார்கில் கொண்டாட்டம்!,..

சுற்றிலும் வீரம், நாடெங்கும் போரின் தாக்கம், அது ஒரு வெற்றிப் பொழுது அங்கே கம்பீர அறிவிப்பு கார்கில் வெற்றி என்ற அந்த  வெற்றி முரசு  எட்டுதிங்கெங்கும் எதிரொலித்தது.  உலக  நாடுகளில் இந்தியாவின் எழுச்சிப் பதியப்பட்டது. பந்தமாக இருந்து  பங்காளி ஆன பாகிஸ்தானின் பல்லுப் புடுங்கப்பட்டு அனுப்ப பட்டது.  விசம் முறிந்த பாம்பாக, முக்கறுப்பட்டும் இன்னும் நம்மை முட்டு மோதுகின்றது.

ஒரு தேசத்தின் ஆற்றல், அந்நாட்டின் பாதுகாப்பில் உள்ளது,  அந்த  பாதுகாப்பை வழங்கும் படையானது என்றும் எக்காலத்திலும் போற்றுதலுரிக்குரியது. இன்றைய காலகட்டங்களில் உலகின் வலிமை மிக்க படையாக இந்திய ராணுவம் சிறந்து விளங்குகின்றது. 

இந்தியாவின் ஒவ்வொரு சூழலிலும் பாதுகாப்பினை நல்கி, உயிர் தியாகம் செய்து போராடி  நாட்டைக் காத்து நின்றுள்ளது. இந்திய ராணுவ வெற்றிகளில் மிகமுக்கியமானது கார்கில்  வெற்றி குறிப்பிடத்தக்கது. இந்தியாவின்
கார்கில் போரின் 20-ம் ஆண்டு வெற்றி தினத்தை முன்னிட்டு உயிர்நீத்த ராணுவ வீரர்களுக்கு நாடு முழுவதும் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.



இன்று காஷ்மீரில் முப்படைகளின்  தளபதிகளும், பாதுகாப்புத்துறை அமைச்சரும்  கார்கில் மாவட்டத்திலுள்ள நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி கொண்டாடினார்கள்.   குடியரசுத் தலைவர் மற்றும் அமைச்சர்கள் அனைவரும் இதனை வாழ்த்து தெரிவித்தனர்கள். 

இந்திய ராணுவத்தின் உறுதியையும், வலிமையையும் உலகிற்கு பறைசாற்றிய கார்கில் போரின் 20-ம் ஆண்டு வெற்றியை முன்னிட்டு டெல்லி இந்தியா கேட் அருகே கட்டப்பட்டுள்ள தேசிய போர் நினைவகத்தில் முப்படை வீரர்களின் சார்பில் வெற்றி கொண்டாட்டங்கள் நடைபெற்றன.

இதுகுறித்து, வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: கார்கில் வெற்றி தினம், ஆண்டு தோறும், ஜூலை, 26ல் கொண்டாடப்படுகிறது. கார்கில் போரில், இந்தியா வெற்றி பெற்று, இன்றுடன், 20 ஆண்டுகள் நிறைவடைகின்றன. 20-வது ஆண்டு விழாவை முன்னிட்டு, மத்திய ராணுவ அமைச்சகம், கார்கில் வெற்றி தினம் தொடர்பான, வீடியோவை தயாரித்து வெளியிட்டுள்ளது.

ராணுவ தளபதி  கார்கில் வெற்றி விழா   நாளான இன்று பாகிஸ்தானுக்கு அவர் வெளியிட்ட செய்தியானது குருத்தனமாக  மீண்டும் முயற்சி செய்தால் முடித்துவிடுவோம் என்றார்.

ராஜ்நாத் சிங் பாதுகாப்புத்துறை அமைச்சர் எனபதால் பாகிஸ்தானுக்கு கொஞ்சம் பதிலடி பலமாகவே கொடுக்கப் பட்டது. ராஜ்நாத் பாதுகாப்பு விசயத்தில் பாவம், பாரபட்சம் பாக்காத மந்திரி என்பது அறிந்ததே. 

Post a Comment

0 Comments