நாம் அன்றாட நடவடிக்கைகளில் முக்கியமாக கடைப்பிடிப்பதில் ஒன்றாக பூஜை உள்ளது. ஆன்மீகம் என்பது அனைவரது வாழ்விலும் முக்கியப் பங்கு வகிக்கின்றது. நாம் தினசரி பூஜையின் பொழுது கடைப்பிடிக்க வேண்டிய முறைகள் இங்கு விளக்கியுள்ளோம்.
தினசரி காலையும், மாலையும் தூய மனதுடன் சில நிமிடங்களாவது கடவுள் பெயரை உச்சரிக்கலாம் அல்லது கடவுளுக்கான மந்திரங்கள் உச்சரிக்கலாம். ஓம், ஆம், ஊம் மற்றும் குரான் ஓதுவது பைப்பிள் படிப்பது போன்ற நடவடிக்கைகளை அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப பின்ப்பற்றலாம்.
தினசரி காலை எழுந்தவுடன் பார்க்க வேண்டியவை கோவில், கோபுரம், சிவலிங்கம், தெய்வப் படங்கள், நல்ல புஷ்பங்கள், மேகம் சூழ்ந்த மலைகள், தீபம், கண்ணாடி, சந்தனம், மிருதங்கம், கன்றுடன் பசு, உள்ளங்கை, மனைவி, குழந்தைகள் மற்றும் அமைதியான இசை போன்றவை பார்த்து கேட்க வேண்டும். நல்ல சிந்தனைகளை மனதில் பதித்து தொடர வேண்டும்.
நம் வீட்டின் கிழக்குப் பக்கம் துளசிச் செடி, வேப்ப மரம், ஓம வள்ளி இழைச் செடி, இருக்க வேண்டும். மேலும் தொட்டால் சிணுங்கி செடி இருப்பது மிகச்சிறப்பு அதனால் எந்தவித நோயும் வராது. விஷ ஜந்துக்களும் நம்மை அண்டாது. தூய்மையான காற்றும் கிடைக்கும். வீட்டில் ஐஸ்வர்யம் பெருகும்.
வீடுகளில் பூஜை அறையில் தேவை இல்லாத உடைந்த பொருட்களைச் சேர்த்து வைக்காதீர்கள். இது இறை சக்தியைக் குறைக்கும். இது ஆன்மீக அதிர்வுகள் ஏற்படுத்தாது. குறைந்த அளவு பூஜைக்கு தேவையானப் பொருட்களை மட்டும் வைத்துக் கொள்ளுங்கள்.
சிவன், பார்வதி, விநாயகர், முருகர் உள்ள படம் ஒன்றை கிழக்குப் பார்த்து மாட்டி வைக்க வேண்டும், அது வீட்டில் உள்ள வாஸ்து குறைபாடுகளை சிறிது சிறிதாக நீக்கும்.மேலும் வீட்டில் கதவோரம் உப்பு சிறிய பவுலில் வைத்தால் திருமகள் அருள் பெறலாம். கிளாஸில் தண்ணீருடன் உப்பு சிறதளவு போட்டு வையுங்கள், இது வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றலை போக்கச் செய்யும்.
செவ்வாய், வெள்ளி ஆகிய தினங்களில் பூறை அறையை தண்ணீர் ஊற்றிக் கழுவ வேண்டும். மார்பிள், கிரானைட் தரைகளாக இருந்தால் ஈரத்துணியால் துடைக்க வேண்டும். அமாவாசை, பவுர்ணமி, வருடப்பிறப்பு போன்ற பண்டிகை நாட்களுக்கு முதல் நாளும் இவ்வாறு செய்ய வேண்டும். வீட்டை கழுவும் பொழுது அல்லது துடைக்கும் தண்ணீரில் உப்பு, மஞ்சள் உடன் கோமியம் சிறிய அளவில் சேர்த்து சுத்தம் செய்யலாம். டைல்ஸ் கீளின் செய்யும் பொழுது உப்புக்கு பதிலாக பச்சை கற்பூரம் வைத்து சுத்தப்படுத்தலாம்.
நமது வலது உள்ளங்கையில் மகாலட்சுமி இருப்பதால் காலை எழுந்தவுடன் வலது உள்ளங்கையை பார்க்க வேண்டும். இது துவாதசன தரிசனம் எனப்படும். பார்வதி மற்றும் லட்சுமி, சரஸ்வதி மூவரின் அருளும் பெறலாம்.
அமாவாசை, பவுர்ணமி, மாதப்பிறப்பு, ஜன்ம நட்சத்திரம் ஆகிய தினங்களில் எண்ணெய் தேய்த்துக் குளிக்க கூடாது.
பொதுவாக நெற்றிக்கு திலகமிட்டு பூஜை செய்வதுதான் தெய்வத் தரிசனத்தை ஆற்றல் மிகுந்ததாக உருவாக்கும்.

0 Comments