உலக குத்துச் சண்டையில் ஒலிம்பிக் சாம்பியனை வென்ற உள்ளூர்க்காரர்

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மிசோரத்தைத்தின் கிரமத்தை சேர்ந்த 22 வயது இளைஞன் நட்லாய் லால்பியக்கிமா  உலகு குத்துச் சண்டைப் போட்டியில்  பங்கு கொண்டு சாம்பியன் பட்டத்தைப் பெற்றுள்ளார். நட்லாய் ஒலிம்பிக் சாம்பியனை வென்று இந்தியாவைப் பெருமைப் படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். 



உலக குத்துச் சண்டைப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்று சாதனைப் புரிந்த தேச வீரரை ஏனோ  ஊடக  உலகம் பெருமைப் படுத்த தவறியது.    கிரிக்கெட்டு நிகராக நாம் அனைத்து வீரர்களையும் பாராட்டி ஆதரவு கொடுத்து பெருமைப் படுத்த வேண்டியது நமது கடமை ஆகும். 

குக்கிராமத்தில் பிறந்து குத்துச்சண்டையில் சாதனை: 

இந்தியாவின்  வடகிழக்கு மாநிலங்களின் ஒன்றான்   மிசோராத்தின் சைகா என்னும் சிறிய கிராமத்தை சேர்ந்தவர் நட்லாய் லால்பியாக்கிமா, 22 வயது இளைஞர் ஆவார். 

நட்லாய்  சாதரண  மீனவ குடும்பத்தைச்  சேர்ந்த இளைஞர் ஆவார். 2009 முதல் குத்துச்சண்டையில்  விளையாடி வருகின்றார். 

இவர் 2010 ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கம் பெற்று தந்தார். 2015 இல் புரோ சாம்பியானாக  திகழ்ந்தார். 

2017 ஆம் ஆண்டில்  இந்தியாவின் சார்பாக பங்கு பெற்று வெண்கலம் பதக்கம்பெற்றார். 2011 ஆம் ஆண்டில் மிசோர மண்டல சார்பில் தேர்வு செய்யப்பட்டார். 



ஒலிம்பிக்கின் நெம்பர் 1, லைட் வெய்ட் 49 கிலோ சாம்பியனான  ட்ஸ்மாட்டாவை வென்று வரலாற்று சாதனைப் புரிந்துள்ளார் நமது இந்திய நட்லாய்.

நட்லாயை நாம்  நினைத்துப் பார்க்க வேண்டும். அவரின் வெற்றியை இந்திய நாட்டின் வெற்றியாய் கொண்டாட வேண்டும்.  22 வயதே ஆன இளைஞரின்  சாதனையை இந்தியாவின் சார்பாக சிலேட்குச்சி கொண்டாடுவதில் பெருமைப் படுகின்றது.


Post a Comment

0 Comments