பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு டிஎன்பிஎஸ்சியில் பணிவாய்ப்பு!..

தமிழக அரசின் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு ஆணையம் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. 

10 லட்சதிற்கு பேற்பட்ட தேர்வர்கள் எதிர்கொள்ளும் தேர்வான குரூப் 4 தேர்வினை எழுத விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம். 

குரூப் தேர்வுக்கு அறிவிக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை மொத்தம் 6491 ஆகும். 

கிராம நிர்வாக அலுவலர், 297
ஜூனியர் அஸிடெண்ட் நான் செக்கியூரிட்டி  -2688 பணியிடங்கள்
ஜூனியர் அஸிஸ்டெண்ட் செக்கியூரிட்டி - 104 பணியிடங்கள்
பில் கலெக்டர் கிரேடு-1 பிரிவு- 34 பணியிடங்கள்
பீல்டு சர்வேயர் -509 பணியிடங்கள்
டிராப்ட்ஸ்மேன்-74 பணியிடங்கள்
டைபிஸ்ட் 1901 பணியிடங்கள்
ஸ்டெனோ டைபிஸ்ட் கிரேடு-3 பிரிவு- 784 பணியிடங்கள்
 போன்ற பணியிடங்கள் குரூப் 4 பணிக்கு அறிவிக்கப்பட்டுள்ளன. 




இப்பணிகளுக்கு10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் அரசின் தட்டச்சு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.  தமிழ் ஆங்கில ஏதாவதொரு மொழியில் தட்டச்சு தேர்வு வெற்றி பெற்றிருப்பவர்கள் மற்றும் தமிழ் அல்லது ஆங்கிலம் போன்ற ஏதாவதொரு  மொழிகளில் சுருக்கெழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணபிக்க தகுதியானவர்களாவார்கள். 

18 முதல் 30 வயதுக்குள் இருப்போர்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். பிளஸ் 2 வகுப்புக்கு மேல் தேர்ச்சி பெற்றவர்கள் இத்தேர்வில் உச்ச வரம்பு  கிடையாது என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க ரூபாய் 100 விண்ணப்ப கட்டிணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம். மேலும் முதல் முறையாக தேர்வு எழுதுவோர்கள் டினபிஎஸ்சி தேர்வுக்கு விண்ணப்பிக்க 150 ரூபாய் பதிவு கட்டணமாக செலுத்த வேண்டும். இவற்றை செலுத்தி 5 வருடத்திற்கு பயன்படுத்த நிரந்த பதிவு எண்ணை பெறலாம். 

மேலும்  தேவைப்படும் தகவல்களை பெற இங்கே கிளிக் செய்யவும். http://www.tnpsc.gov.in/Notifications/2019_19_ccse4-notfn-eng.pdf 


குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க ஜூலை 14, 2019 வரை விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இறுதி தேதி ஆகும்

 மேலும் படிக்க:

Post a Comment

0 Comments