வருக வருக மண்ணின் மைந்தரே வான்படை நாயகரே வருக அபிநந்தரே!

வாகா வழியாக இந்தியா வந்தார் அபிநந்தன், பெற்றோர்கள் மற்றும்  தலைவர்கள் மூலம் வரவேற்கப்பட்டார்.

பாகிஸ்தான் ராணுவத்தின் பிடியில் சிக்கிய அபிநந்தன் அமைதி மற்றும் நல்லெண்ண அடிப்படையில் விடுவிக்கப்பட்டார்.   பாகிஸ்தான் பிரதமர்  நேற்று அறிவிக்கையின்படி வெளியிட்டார்.

வாகா எல்லை வழியாக இந்தியா விமானி அபிநந்தன் இந்தியாவுக்கு அனுப்பி வைப்பட்டார். ராவல்பிண்டியில் தங்க வைக்கப்பட்டிருந்த  அவரது உடல்நிலை சோதனை  செய்யப்பட்டு சீராக உள்ளதாக அறிவிக்கப்பட்டதை  தொடர்ந்து இஸ்லாமபாத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் அபிநந்தன் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இந்திய எல்லையில் மக்கள் திரளாக சூழ  பெரும் வெற்றிக் கோசங்கள் முழக்க இந்தியாவை சேர்ந்தடைந்தார். இந்நிலையில் அபிநந்தனை வரவேற்க வாகா எல்லையில், மாலை, தேசிய கொடிகளுடன் பல்லாயிரக்கணக்கானோர் கூடி நி்ற்கின்றனர். 


மக்களின் மகிழ்ச்சி வெல்லம் நாட்டையே பெருமளவு மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தியுள்ளது.  பஞ்சாப் முதல்வர் நேரிலேயே  வரவேற்கிறார். 

அபிநந்தன் இந்தியா வந்தப் பின்பு விங்- காமாண்டர்  வாகாவில் சிறப்பான வரவேற்பு மேளங்கள் முழக்கத்துடன், உயர் அதிகாரிகள் அவரை வரவேற்கவுள்ளார்கள். 

வருக வருக அபிந்தந்ரே தாய் மண் உங்களை  தாவி அணைக்கின்றது. 
 இரண்டு நாள் உங்களுக்கன உலகமே போராடியது... 
வானில் பறந்து 
வாகா எல்லையை விட்டு போனீர்கள்
இன்று வாகா எல்லையில் உங்கள் வரவேற்கின்றோம்... 

 காப்புடையில்  பாகிஸ்தான் மண்ணில் விழுந்தபின்பும் 
கத்திப் போன்ற புத்திக் கூரிமையுடன் 
இந்திய பாதுகாப்புத் தகவலை  காத்து நின்று 
நிலைமையை கட்டுகோப்பாக கையாண்டுள்ளீர்கள். 

தேசமே பெருமிதம் கொள்கின்றது.. 
உங்களை எண்ணி இந்தியத்  தாயவள் 
இதயம் குளிர்கின்றது.. 

என் தவம் செய்தேன் உங்களைப் போன்றோர் உள்ள தேசத்தில் பிறந்தேன்
கம்பீரமும்
கணிவும்
காப்பும் கொண்டு கடமையை ஆற்றிய எங்கள் தேச வான்ப்படை  காவலரே 
வருக! வருக!... 

எல்லையில் உங்களுக்கு நடந்தவற்றை எங்களுக்கு 
எடுத்துரையுங்கள் 
நளைய தூண்களுக்கு நேற்றைய உங்கள் அனுபவம் 
இன்றே பாடமாக இருக்கட்டும். 

சொகுசு வாழ்க்கை வாழ்ந்திருக்காலம்
சொர்கம் போயிருக்கலாம் சோடைபோயிருந்தால் 
தாய் மண்ணின் தங்கமகன் 
வாய்ப்புக்கு வாய்ப்பளிக்காமல் தேசத்தை உங்கள் தேகத்தில் கொண்டு ஆற்றிய  கம்பீரம் கண்டோம்... கர்வம் கொள்கிறோம்.... 


Post a Comment

0 Comments