மோடி மேல் கோபம் காட்டுகின்றேன் பேர் வழிகள் எல்லாம் சரி, தேசத்தை அவமானப்படுத்துகின்றீர்கள் தெரிஞ்சு செய்யுறீங்களா அட பதறுகளா,, ஒரு தேசப்பற்றாளின் வேதனை குமுறல்.
ஊடகத்தில் ஊருக்குள் குட்டையை கிளப்பும் பல பெரிய கைகளின் ஊடுருவலால், நாட்டின்பிரதமர் என்ற பதவி மரியாதை கூட இல்லாமல் எதிர்த்து கோசம் எழுப்பிய வண்ணம் நாம் இருக்கின்றோம். அவரோ எதையும் கண்டுகொள்ளவில்லை.
நாட்டின் பிரதமரை எதிர்கிறோம் என்று நாட்டின் கொள்கையை கொள்ளைப்புரத்தில் விட்டுவந்து விடுகிறோம் என்ன நியாயம் இது. நாடு முழுவதும் பேசும் சுதந்திரம் மற்றும் எழுதும் சுதந்திரம், கருத்து சுதந்திரம் கண்மூடித்தனமாக கொடுக்கப்பட்டுள்ளது என்பதை மக்களின் சமூக வளைத்தள உபயோகம் உணர்த்துகின்றது.
அபிநந்தன் கைது செய்யப்பட்டு மீண்டும் திரும்பி நாடு வந்து சேர்ந்தார். ஆனால் இவையெல்லாம் நிகழ்ந்தது இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கை மற்றும் உலக நாடுகளின் மத்தியில் இந்தியாவின் தனித்தன்மை நிருபிக்கபடல் போன்ற காரணங்களால் தான் என்பது நமக்கு விளங்குவதில்லை. இவ்விடத்தில் மோடியில்லை வேறு யார் இருந்தாலும் இதே நடவடிக்கைகள்தான் எடுக்கப்பட்டிருக்கும் ஆனால் எதைப் பற்றியும் கவலையில்லாமல் சமூக வலைதளத்தில் எல்லாம் அரசியல், இது மோடி அரசியல் என கருத்துக்கள் வெளிவருகின்றது...
இதைவிட கொடுமை என்னவென்றால் தீவிரவாதிகளுக்கு உற்பத்தி தொழிற்சாலையாக இருக்கும் பாகிஸ்தான் பிரதமரை ஆதரிக்கிறேன் பேர்வழி என அவருக்கு விழா எடுக்கும் இந்தியர்களை நினைத்தால் இந்த நாடு இந்நாட்டு மக்களின் கட்டுப்படுத்தாத சுதந்திர எண்ணத்தால் தான் சிக்குண்டு கிடக்கின்றது என்று தெரியவருகின்றது.
இதற்கு முன் இந்தியாவின் இராணுவ வீரர்கள் பாகிஸ்தானிடம் சந்தித்த கெடுபிடிகளுக்கு முன் இந்தியா எப்படி தற்பொழுது எளிதாக பாகிஸ்தானை அழுத்தம் கொடுக்க முடிகின்றது. மற்றும் பாகிஸ்தான் இதில் செய்த தவறுகள் என்னென்ன போன்ற அனைத்து தகவல்களையும் படித்து, படித்து அவற்றில் உள்ள உண்மைகளை ஆராய்ந்து பின் கொடித்தூக்கலாம் என்ற அடிப்படை சாரம்சம் கூட நமது சில மக்களுக்கு தெரிவதில்லை என்பதுதான் கொடுமையின் உச்சம்.
உண்மையை உணர்ந்து ஆராய்ந்து பேச வேண்டியது நமது கடமை நமக்கு கொடுக்கப்பட்டிருக்கும் பேச்சுரிமையை அளவுகடந்து பயன்படுத்துதல் கூடாது. இந்திய பிரதமர்க்கு கோ-பேக் சொன்னது தவறு மேலும் அது தனிப்பட்ட உங்கள் உரிமை, ஆயினும் அது குறித்த கவலையை விட பாகிஸ்தான் பிரதமர்க்கு விழா எடுக்கும் தேசப்பற்றை நினைத்தால் கேட்பாரற்று வீதியில் விட்டெறிந்தோமோ என்ற எண்ணத்துடிக்கின்றது.
சமூக வலைதளத்தில் சமூக விரோதிகளின் ஊடுருவல்கள் அதிகமாக இருக்கின்றது. மக்களின் சிந்தனையை மழுங்கடிக்கச் செய்கின்றது என்பது மறுக்க முடியாது கசப்பான உண்மை ஆகும்.
சமூக ஊடகங்களால் பல நல்ல செயல்கள் ஆடம்பரம் இன்றி நடைபெறுகின்றது ஆனால் தேசத்திற்கு எதிரான கருத்துக்களைவிட மற்ற தேசத்திற்கு ஆதரவான கருத்துக்கள் தாய்நாட்டை அவமானப்படுத்துதல் போலுள்ளது. பாராட்டுகளுக்கும், பழித்தலுக்கும் வேறுபாடு பலவுள்ளன.
அறிவை ஒன்று சேர்ந்து சிந்தித்து ஆராய்ந்து மக்கள் செயல்பட வேண்டியது அவசியமாகின்றது.
0 Comments