பாதுகாப்பு நடவடிக்கையாக இந்திய விமானப் படையினர் மேற்கொண்ட தாக்குதலுக்கு ஆதாரம் கேட்பது நேரத்தை வீணடிக்கும் செயல் என்றும் மேலும் இது விளையாட்டு செயல் அல்ல அனைத்து விளக்குவதற்கு என மத்திய அமைச்சர் விகே சிங் பதில் அளித்துள்ளார்.
தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தில் இத்தனை பேர் இருந்திருக்கலாம் என்று உளவுத்துறை தெரிவித்த தகவல் அடிப்படையாகக் கொண்டு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது குறிபிடத் தக்கது ஆகும்.
1947 ஆம் ஆண்டு முதல் இன்று வரை பாதுகாப்பு நவடிக்கைளுக்கு ஆதாரங்கள் காட்டப்படவில்லை என்றும், இந்தியப் பாதுகாப்பு படை ஒரு நாட்டின் எல்லைக்குள் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை என்றும் இது நாட்டு மக்களின் பாதுகாப்பை கருதி பயங்கரவாத இயக்கத்திற்கு எதிரான நடவடிக்கை என்றும் அறிவித்துள்ளார்.
மக்களவை தேர்தல் நெருங்குவதையொட்டி நாட்டில் எது நடந்தாலும் அதனை அரசியலாக்கி கேள்வி கேட்பதை ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சிகள் இரண்டு குறைசொல்வது வாடிகையாக கொண்டுள்ளன. இந்த குறைகூறும் செயல் இப்பொழுது அல்ல எப்பொழுதெல்லாம் தேர்தல் ஆரம்பிக்கின்றதோ அப்பொழுதெல்லாம் இருகின்றது. ஆகையால் இதனை நாம் முழுமையாக உற்று நோக்க வேண்டியது அவசியம் ஆகும்.
வாக்காளர்களை கவர அரசியல் கட்சிகள் தகிடுதத்தம் ஆடும், ஆனால் வாக்களர்களின் இதனை எல்லாம் அறிந்து செயல்படுகின்றனர் என்பதை மறுக்க முடியாத உண்மையாகும்.
0 Comments