இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி !

நாக்பூரில் நேற்று நடைபெற்ற ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2வது ஒரு நாள் தொடரில் இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. முன்னதாக டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த ஆஸ்திரேலியா அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டு இருந்தன. அஷ்டன் டர்னர் மற்றும் ஜேசன் பெஹரேண்டோரஃ நீக்கப்பட்டு அவர்களுககு பதிலாக ஷான் மார்ஷ் மற்றும் நாதன் லயன் இடம்ப்பெற்று இருந்தனர். இந்திய அணியில் எந்த மாற்றமும் இல்லை.

தடுமாறிய இந்தியா அணி

அதன்படி பேட்டிங்கை துவங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்து இருந்தது. துணை கேப்டன் ரோஹித் சர்மா பேட் கம்மின்ஸ்ன் முதல் ஒவேரிலே டக் அவுட் ஆகி வெளியேறினார். 

சுழல் பந்துவீச்சுக்கு மைதானம் சாதகம் என்பதால் ஆஸ்திரேலியா அணி பவர்பிலேவிலே சுழல் தாக்குதலை தொடுத்தனர். இதனால் சீரான இடைவேளையில் இந்தியாவின் விக்கெட்கள் சிதறின. தவான் 21 ரன்களுக்கு மேக்ஸ்வெல்யிடம் வீழ்ந்தார். ராயுடுவை 18 ரன்களுக்கு லயன் வெளியேற்றினர்.

இந்திய அணியை காப்பாற்றிய ஜோடி 

அடுத்து வந்த தமிழகத்தை சேர்ந்த விஜய் சங்கர் அதிரடியில் மிரட்டினார். ஒரு புறம் கேப்டன் கோலி அரைசதம் கடக்க மறுபுறம் சற்று அதிரடியாக விளையாடினார் விஜய் சங்கர். அவர் தனது பங்குக்கு 46 ரன்கள் எடுத்த நிலையில் துரதிஷ்ட வசமாக ரன் அவுட் ஆகி வெளியிறினார். இந்த ஜோடி 81 ரன்கள் சேர்த்தது.

இந்தியா 250 ரன்கள் 



அடுத்து வந்த வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்களை இழக்க மீண்டும் இந்தியா சிக்கி தவித்தது. ஒரு புறம் கேப்டன் கோலி தனி ஒருவனாக நின்று தனது 40 வது சதத்தை பூர்த்தி செய்தார். அவர் தனது பங்கிருக்கு 116 ரன்கள் விளாசினார். அவர்க்கு துணையாக நின்ற ஜடேஜா 21 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு பெவிலியன் திரும்பினர். ஆஸ்திரேலியா பந்துவீச்சில் மிரட்டிய பேட் கம்மின்ஸ் 29 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றினார். ஆடம் ஜம்பா 2 விக்கெட்டும் மற்றவர்கள் 1 விக்கெட்டும் கைப்பற்றினார். முடிவில் இந்தியா 250 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

ஆஸ்திரேலியா நல்ல தொடக்கம்:

பின்னர் 251 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களம் இறங்கிய ஆஸ்திரேலியா அணிக்கு கேப்டன் பின்ச் மற்றும் உஸ்மான் கவாஜா இருவரும் நல்ல தொடக்கம் ஏற்படுத்தி கொடுத்தனர். இருவரும் பொறுமையாக நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கடைசியில் ஒரு வழியாக இவர்களை குலதீப் யாதவ் பிரித்தார். பின்ச் 37 ரன்கள் எடுத்த நிலையில் வெளியிரினர். அடுத்து கவாஜா 38 ரன்கள் எடுத்த நிலையில் ஜாதவ் காலி செய்தார். அடுத்து சீரான இடைவெளியில் விக்கெட்கள் விழுந்தன. ஷான் மார்ஷ் 16 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜாவிடம் வீழ்ந்தார். அடுத்து வந்த மேக்ஸ்வெல் 4 ரன்கள் எடுத்த நிலையில் குலதீப் வெளியேற்றினர். 


ஆபத்தான ஜோடி :

6 வது பேட்ஸ்மே களம் இறங்கிய மார்கஸ் ஸ்டோனிஸ் பீட்டர் ஹன்ட்ஸ்கோம் உடன் இணைந்தார். இந்த ஜோடி ரன் அவுட் முறையில் ஜடேஜாவின் அற்புதமான த்ரோவில் 48 ரன்கள் எடுத்து இந்தியாவின் வெற்றிக்கு தலைவலியாக இருந்த ஹன்ட்ஸ்கோம் வெளியேறினார். அடுத்து வந்த அலெக்ஸ் கேரி அதிரடியாக 22 ரன்கள் குவித்த நிலையில் குலதீப் யாதவ் பந்துவீச்சில் போல்டு ஆகி வெளியிறினார். வெற்றிக்கு தேவை 33 ரன்கள் என்று இருந்த நிலையில் பும்ரா தனது அபாரமான பந்துவீச்சில் ஒரே ஒவேரில் 2 விக்கெட்டை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணிக்கு கொடச்சல் கொடுத்தார்.

த்ரில்லிங்கான கடைசி ஓவர் :

ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற 6 பந்துகளில் 11 ரன்கள் தேவை கைவசம் 2 விக்கெட்கள் இருந்தன. களத்திலோ மார்கஸ் ஸ்டோனிஸ் 52 ரன்களுடன் களத்தில் இருந்தார். இந்தியா அணியிலோ பந்துவீச விஜய் சங்கர் மற்றும் கேதார் ஜாதவ் இருவருக்கு மட்டுமே வாய்ப்பு இருந்தன. முதல் ஓவேரில் 13 ரன்கள் விட்டுக்கொடுத்த விஜய் சங்கர் பந்துவீச அழைக்கப்பட்டார். முதல் பந்திலேயே ஸ்டோனிஸ் விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார். அடுத்த பந்தில் ஜம்பா 2 ரன்கள் எடுக்க 3 வது பந்தில் ஜம்பாவை போல்டு ஆக்கி இந்தியாவை 8 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற வைத்தார்.



Post a Comment

0 Comments