அறிமுகமாகுது எம் ஐ பே கூகுள் பேயை மிஞ்சுமா !

பேட்டியம், மற்றும் கூகுள் பே போல சேவையை  இந்தியாவில் சியோமி நிறுவனம் அதன் எம்ஐ பே சேவையை அறிமுகம் செய்துள்ளது. மேலும் இந்த எம்ஐ பே சேவை   ஐசிஐசிஐ பேங்குடன் இயங்குகின்றது.

பயனர்கள் தங்களது யுபிஎஐயின்  முகவரி மற்றும் பேங்க் அக்கவுண்ட்டிற்கு நேரடியாக பணம் அனுப்பும் வசதியை வழங்குகிறது. எம்ஐ பே சேவையை பயன்படுத்தும் அனைத்தும் பயனர்களின் அனைத்து விவரங்களும் உள்நாட்டு சர்வெர்களிலேயே சேமிக்கப்படுவதாக சியோமி தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். 


எம்ஐ  பயன்படுத்த போன், கான்டாக்ட் மற்றும் எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவற்றை இயக்குவதற்கான அனுமதியினை பயனாளர்கள் ஆப்பிற்கு வழங்கினால் மட்டுமே இயக்க முடியும்.

எமை பே சேவை காண்டாக்ட்,  எஸ்எம்எஸ், ஸ்கேனர் செயலிகளினுள் எம்ஐயுஐ  தளத்தின் ஆப் வால்ட்டில் ஒன்றிணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பயனர்கள் மிக எளிமையாக பணப்பரிமாற்றம் செய்ய முடியும். இத்துடன் மற்ற மொபைல் பேமென்ட் சேவைகளை போன்று மொபைல் போன் பில்/ ரீசார்ஜ், டி.டி.ஹெச். ரீசார்ஜ், மின்சேவை கட்டணம் மற்றும் பல்வேறு சேவைகளுக்கு பணம் செலுத்தலாம்.

சியோமியின் எம்ஐ பே செயலி வரும் வாரங்களில் அனைவருக்கும் கிடைக்கும், எம்ஐ  ஆப் ஸ்டோரில் பயனர்கள் இதனை டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

எம்ஐ பே செயலியை கொண்டு பணப்பரிமாற்றம் செய்யும் போது பயனர்கள் அதிகபட்சம் 100 ரெட்மி நோட் 7 போன்களையும், 50 எம்ஐ எல்.இ.டி. டி.வி. 4ஏ ப்ரோ 32 இன்ச் மாடல்களை வெல்ல முடியும்


பயனர்களின் முழு தகவல்களும் இந்தியா சார்ந்து இயங்கும் கிளவுட் சேவையில் என்க்ரிப்ட் செய்யப்பட்ட வடிவில் சேமித்து வைக்கப்படுவதாக சியோமி தெரிவித்துள்ளது. செயலியை சோதனை செய்தபின் எம்ஐ பே செயலியை எம்ஐயுஐ  10 பீட்டாவில் அறிமுகம் செய்து, தற்சமயம் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்துள்ளது.


மேலும்  படிக்க:

யூ டியூப் நிறுவனத்தின் மியூசிக் ஸ்டிரீம்களின் அறிமுகம்


Post a Comment

0 Comments