மீடியாக்கள் கவனத்திற்கு தேர்தல் ஆணையம் கண்காணிக்கின்றது!

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடக்கூடிய முக்கியக் கட்சிகளின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுவிட்டது. பிரசாரங்களும் தொடங்கியுள்ளன.
மீடியாக்களில்  வேட்பாளர்கள் அல்லது கட்சிகள் சார்பில் ஒளிபரப்பக்கூடிய விளம்பரங்கள் முழுவதும்  கண்காணிக்க கண்காணிப்பு அறைமூலம் கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்தல் ஆணையத்தால் அமைக்கப்பட்டுள்ள பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்ய அமைக்கப்பட்டுள்ள கட்டுபாட்டு அறையை சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி  ஆய்வு செய்தார்.

 
 செய்தியாளர்களைச் சந்தித்த தேர்தல் அதிகாரி  ஊடகங்களில் வேட்பாளர்கள் அல்லது கட்சிகள் விளம்பரம் செய்வதற்கு முதன் முறையாக ஊடகச் சான்று ஊடக கண்காணிப்புக் குழுவிடம் முறையாக அனுமதி பெற்று, தேர்தல் ஆணையம் வழங்கும் குறியீட்டு எண்ணுடன்தான் விளம்பரங்களை ஒளிபரப்பவோ அல்லது அச்சிடவோ வேண்டும். 
 
விளம்பரங்களை ஆய்வு செய்து அதன் செலவினை வேட்பாளர் கணக்கோடு சேர்க்கப்படும் என தெரிவித்தார். அதே போல் சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோக்களையும் ஆய்வு செய்து வருவதாகவும் அந்த செலவினையும் வேட்பாளர் செலவில் சேர்க்கப்படும் என கூறினார்.

அதே போல் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுக்களைச் சேர்த்து மொத்தம் 96 குழுக்கள் செயல்படுவதாகவும், அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள ஜி.பி.எஸ் கருவிகள் துணைகொண்டு, அவர்களின் செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் தேவைக்கேற்ப துணை ராணுவப்படைகள் வரவழைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
தேர்தல்  நடந்துமுடியும் காலம் முழுவதும் அனைத்து நடவடிக்கைகளும் முழு கட்டுப்பாட்டுடன் இருக்க தேர்தல் ஆணையம் சிறப்பாக செயல்படுகின்றது.

Post a Comment

0 Comments