யூ டியூப் நிறுவனத்தின் மியூசிக் ஸ்டிரீம்களின் அறிமுகம்

யூ டியூப் நிறுவனத்தின்,  யூடியூப் மியூசிக் ஸ்டிரீமிங் சேவையை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. கூகுள் தனது மியூசிக் சேவையை 2016  ஆம் ஆண்டு அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது ஆகும்.

புதிய  யூடியூப் மியூசிக்கில் பாடல்கள், ஆல்பம்கள், பிளே லிஸ்ட்கள் ஆர்டிஸ்ட் மற்றும் ரேடியோ மற்றும்  யூடியூபின் பிரத்யேக  ரீமிக்ஸ், லைவ் நிகழ்ச்சிகள், கவர்கள் வீடியோக்கள் கிடைக்கப் பெறலாம். மிக எளிமையாக காட்சியளிப்பதோடு தனிப்பட்ட முறையில் ஒருங்கிணைக்கப்படுகின்றன. 

யூடியூப் பிரீமியம் சேவையில் ஆப்லைன் டவுன்லோடு வசதி கொடுக்கப்பட்டுள்ளது. விளம்பரங்களின்றி யூடியூப் மியூசிக் பிரீமியம் ஸ்வையை 99 மற்றும் குடும்ப சந்தாவுடன் மாதம் 149 கட்டணம் நிர்ணயம் செய்துள்ளது. 



யூடியூப் மியூசிக் சேவை இலவசமாகவும் கிடைக்கிறது. எனினும், இலவச சேவையை பயன்படுத்தும் போது விளம்பரங்கள் வரும். யூடியூப் மியூசிக் பிரீமியம் சேவையில் பாடல்கள் மற்றும் வீடியோக்களை ஸ்மார்ட்போன் லாக் செய்வதுடன் , பேக்கிரவுண்டிலும் இயக்க முடியும்.

சிறப்பு அறிமுக சலுகையின் பேரில் யூடியூப் மியூசிக் சேவைக்கான பிரீமியம் சந்தா முதல் மூன்று மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. மூன்று மாதங்களுக்கு பின் பயனர்களது கட்டண சந்தா அமலாகும். கூகுள் பிளே மியூசிக் பயனர்களுக்கு யூடியூப் மியூசிக் பிரீமியம் சந்தாவும் சேர்த்து வழங்கப்படும்.

யூடியூப் நிறுவனம் யூடியூப் பிரீமியம் சேவையை மாதம் ரூ.129 கட்டணத்தில் வழங்குகிறது. யூடியூப் பிரீமியம் சேவையில் பயனர்களுக்கு விளம்பரங்கள் இல்லா சேவையும், பேக்கிரவுண்டு பிளே மற்றும் ஆஃப்லைன் வீடியோக்களை இயக்கும் வசதி வழங்கப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி S10 பயன்படுத்துவோர் யூடியூப் பிரீமியம் சேவை நான்கு மாதங்களுக்கு இலவசமாக பெறலாம். இதில் யூடியூப் மியூசிக் சேவையும் அடங்கும். மற்ற பயனர்களுக்கு மூன்று மாதம் வரை இலவச பிரீமியம் சேவை வழங்கப்படுவதாக தகவல்கள் கிடைக்கப்பெறுகின்றன. ரூ.60 செலுத்தும் பயனர்களுக்கு யூடியூப் பிரீமியம் குடும்ப சந்தா வழங்கப்படுகிறது. மேலும் கூடுதலாக ஐந்து குடும்ப உறுப்பினர்களை சேர்த்துக் கொள்ள முடியும்.

Post a Comment

0 Comments