இந்திய அணி போராடி வெற்றியை பறி கொடுத்தது -விராட் கோலி 41 வது அதிரடி சதம்

ஆஸ்திரேலியா ரன் குவிப்பு 


ராஞ்சியில் நடைபெற்ற இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3 வது ஒரு நாள் போட்டியில் 32 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. டாஸ் வென்ற இந்தியா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி பேட்டிங்கை துவக்கிய ஆஸ்திரேலியா அணி பின்ச் மற்றும் கவாஜா வின் அதிரடி ஆட்டத்தின் மூலம் நல்ல துவக்கம் பெற்றது. பின்ச் 93 ரன்களும் கவாஜா 104 ரன்களும் மாக்ஸ்வ்ல் 47 ரன்களும் ஸ்டோனிஸ் 31 * ரன்களும் அலெக்ஸ் கேரி 21 * ரன்களின் உதவியுடன் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 313 ரன்கள் குவித்தது. இந்திய தரப்பில் குலதீப் யாதவ் 3 விக்கெட்களையும் ஷமி 1 விக்கெட்டும் கைப்பற்றினர்.

இந்தியா தடுமாற்றம்:

பின்னர் 314 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்து இருந்தது . தவான் 1 ரன்னில் ஜே ரிச்சர்ட்சன் வேகத்தில் நடையை கட்ட ரோஹித் சர்மா 14 ரன்களுக்கும் அம்பதி ராயுடு 2 ரன்களுக்கும் பேட் கம்மின்ஸ் வேகத்தில் வீழ்ந்தனர்.

கோலி அதிரடி சதம்


4 வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த கோலி மற்றும் தோனி இணை அணியை சரிவில் இருந்து மீட்கும் முயற்சியில் இறங்கியது. தோனி தன் பங்கிற்கு 26 ரன்கள் சேர்த்த நிலையில் ஜம்பா சுழலில் ஸ்டம்ப்பை பறிகொடுத்தார். அடுத்து வந்த ஜாதவ் ஒரு புறம் பொறுமையாக ஆட மறுபுறம் கோலி அதிரடியில் மிரட்டினார். ஜாதவ் 26 ரன்கள் எடுத்த நிலையில் ஜம்பாவிடம் விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து விஜய் சங்கர் கோலியுடன் இணைந்தார். மறுபுறம் கோலி தனது 41 வது சதத்தை எட்டினார். கோலி 123 ரன்கள் சேர்த்த நிலையில் ஜம்பாவின் சுழலில் அவரும் ஸ்டம்ப்பை பறிகொடுத்து வெளியேறினார் .

ஆஸ்திரேலியா வெற்றி

கோலி வெளியேறும் போது இந்தியாவின் வெற்றிக்கு 95 ரன்கள் தேவை கைவசம் 4 விக்கெட்கள் இருந்தன. ஆனால் அதன் பிறகு விஜய் சங்கர் 32 ரன்களுக்கும் லயோனிடம் வீழ்ந்தார். ஜடேஜா 24 ரன்களுக்கு ஜே ரிச்சர்ட்சன் வேகத்தில் வீழ்ந்தார். அடுத்து வந்த ஷமி 8 ரன்களுக்கும் குலதீப் யாதவ் 10 ரன்களுக்கும் வெளியேற இந்திய அணி 48.2 ஓவர்களில் 281 ரன்கள்க்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து 32 ரன்கள் வித்தியாசத்தில் தோழ்வியை தழுவியது. ஆஸ்திரேலியா தரப்பில் ஜே ரிச்சர்ட்சன் பேட் கம்மின்ஸ் ஆடம் ஜம்பா தலா 3 விக்கெட்களையும் நாதன் லயன் 1 விக்கெட்டும் கைப்பற்றினர்.

ஆட்ட நாயகனாக உஸ்மான் கவாஜா தேர்வு செய்யப்பட்டார் .

இதனால் 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2 - 1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது. அடுத்த போட்டி மொஹாலியில் வரும் 10 ம் தேதி நடைபெறும்.

Post a Comment

0 Comments