ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் சாய்னா நேவால், கிடாம்பி ஸ்ரீகாந்த் ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறினர். சாய்னாவின் காலிறுதி வெற்றியை வைத்து அவர் தொடர்ந்து தொடரை வெல்ல ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து வருகின்றனர்.
இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர் மார்ச் 7 இல் தொடங்கி வரும் 10-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தப் போட்டிக்கான பரிசுத்தொகை மொத்தம் ரூ.7 கோடி. இதனை சானியா வெல்ல வேண்டும் அவரது திறனுக்கு இது ஒரு நல்லவாய்பாக அமையும்.

மகளிர் ஒற்றையர் பிரிவில் சர்வதேச தரவரிசையில் 9-வது இடத்தில் உள்ள இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால், தனது 2-வது சுற்றில் தரவரிசையில் 19-வது இடத்தில் உள்ள டென்மார்க்கைச் சேர்ந்த லின் ஹோஜ்மார்க் கிஜார்ஸ்பெல்ட்டை எதிர்கொண்டார்.
முதல் செட்டை 8-21 என கைப்பற்றி சாய்னாவுக்கு அதிர்ச்சி அளித்தார் டென்மார்க் வீராங்கனை. நிலைமையை சுதாரித்து சாய்னா, 2-வது செட்டை 21-16 என்ற புள்ளிகள் கணக்கில் கைப்பற்றி பதிலடி கொடுத்து தன்னை நிருபித்தார்.
வெற்றியைத் தீர்மானிக்கும் 3-வது செட்டை 21-13 என்ற புள்ளிகள் கணக்கில் தனதாக்கி, 2-1 என்ற செட் கணக்கில் சாய்னா வெற்றி பெற்று காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். இந்த வெற்றியின் மூலம் சானியா தொடரை வெல்லும் ஒரு வாய்ப்பு உறுதியாகிவுள்ளது. நிச்சயம் அறை இறுதி அத்துடன் தொடரை முழுமையாக வெல்வார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
0 Comments