ஆஸ்திரேலியா அணி ரன் குவிப்பு கவாஜா அதிரடி சதம் கேப்டன் பின்ச் 93 ரன் குவிப்பு

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3 வது ஒரு நாள் போட்டி ராஞ்சியில் பகல் இரவு போட்டியாக நடைபெற்று வருகிறது. முன்னதாக டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. ஆஸ்திரேலியா அணியில் நாதன் கோல்டெர்னில் நீக்கப்பட்டு ஜே ரிச்சர்ட்சன் அணியில் இடம்பெற்றார். ஆஸ்திரேலியா அணியின் துவக்க வீரர்களாக களம் இறங்கிய கேப்டன் பின்ச் மற்றும் கவாஜா ஆரம்பம் முதலே அதிரடியில் மிரட்டினர்.


இந்த ஜோடியை பிரிக்க இந்திய பந்துவீச்சாளர்கள் அரும்பாடு பட வேண்டியதாயிற்று. இவர்களின் நேர்த்தியான அதிரடியான ஆட்டத்தை பார்க்கையில் ஆஸ்திரேலியா அணி 400 ரன்கள் வரை எடுக்ககூடிய சூழல் இருந்தது. 

ஒரு வழியாக இந்த ஜோடியை குலதீப் யாதவ் பிரித்தார். 31.5 ஓவர்களில் 193 ரன்களை எட்டிய போது 93 ரன்கள் எடுத்த பின்ச் (ல்பவ்) முறையில் வெளியேற்ற பட்டார். அடுத்து மாக்ஸ்வெல் அதிரடியில் மிரட்டினார். இதற்கு இடையில் கவாஜா தனது முதல் சதத்தை எட்டினார். 104 ரன்கள் எடுத்த நிலையில் கவாஜா ஷமியின் வேகத்தில் பும்ராவிடம் கேட்ச் கொடுத்து தனது விக்கெட்டை இழந்தார். மாக்ஸ்வெல் 47 ரன்கள் எடுத்த நிலையில் 1 ரன்க்கு ஆசை பட்டு தனது விக்கெட்டை இழந்தார்.

அடுத்து வந்த ஷான் மார்ஷை 7 ரன்கள் எடுத்த நிலையில் குலதீப் சுழலில் விஜய் சங்கரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து வந்த ஹண்ட்ஸ்காம் டக் அவுட் ஆகி வெளியேறினார். கடைசியில் ஸ்டானிஸ் 31 ரன்களுடனும் அலெக்ஸ் கேரி 21 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். முடிவில் ஆஸ்திரேலியா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 313 ரன்கள் குவித்தது. இந்திய தரப்பில் குலதீப் யாதவ் 3 விக்கெட்களும், ஷமி 1 விக்கெட்டும் கைப்பற்றினர்.

ஆஸ்திரேலியாவின்  313 ரன்களை இந்திய அணி எதிர்கொண்டு வெற்றியை இலக்கை நிச்சயம் அடையும்  வெற்றி பெறும் என நம்பிக்கையில் இந்திய ரசிகர்கள்!


Post a Comment

0 Comments