இரயில் பயணங்கள் சுகமளிக்க மேலும் இனிய ஒரு வசதி!...

நம்முள் பல பேர் இரயில் பயணம் செய்யும்போது, சிலரது ஸ்டேஷன் இரவில் வரும் மேலும் நம் இறங்க மறந்திடுவோமோ என்று பயந்து கொண்டிருப்போம். இதற்காக நாம் இரவு முழுக்க தூங்காமல் காத்து கொண்டு இருப்போம். 

நாம் என்ன தான் தூங்க கூடாது என்று நினைத்தாலும் நம்மை அறியாமல் உறங்கி போய்விடுவோம், இன்னும் சிலர் கடிகாரத்தில் அலாரம் வைத்துவிட்டு உறங்குவார்கள்.


இனி நீங்கள் இரவில் பயணம் சென்றாலும் சுகமாக தூங்கி கொண்டே செல்லலாம் நீங்கள் செய்ய வேண்டியது உங்களது போனிலிருந்து 139 டயல் செய்ய வேண்டும் பிறகு நீங்கள் பயணம் செய்து கொண்டிருக்கும் ரயிலின் PNR நம்பர்  டைப் செய்ய வேண்டும். பிறகு நீங்கள் இறங்க இருக்கும் ஸ்டேஷன் அருகில் வரும்போது உங்களுக்கு ஒரு எச்சரிக்கை கால் வரும்.

இனி நீங்கள் பயப்படாமல் இரயிலில் பயணம் செய்யும்போது நிம்மதியாக தூங்கிக்கொண்டே பயணம் செய்யலாம்

நீங்கள் உங்கள் குடுபத்தினர் டிக்கெட் அல்லது வேறு நபரின் டிக்கெட் புக் செய்யும்போது தவறு நடந்தால் என்ன செய்வது அந்த தவறை எப்படி சரிசெய்வது வாருங்கள் பார்க்கலாம்.

 டிக்கெட்டை பிரிண்ட் அவுட் எடுத்து உங்கள் அருகில் உள்ள இரயில் ரிஸர்வேசன் கவுண்டருக்கு சென்று பயணம் செய்ய இருக்கும் பயணியின் ஒரிஜினல் ID ப்ரூப் இதனுடன் ஒரு போட்டோகாப்பி   எடுத்துச் செல்லுங்கள்.  நீங்கள் கவுண்டரில் இருக்கும் ஆபிசரிடம் கொடுத்து பெயரை சரி செய்து கொள்ளலாம்

முக்கியமாக இந்த வசதியை  நீங்கள் பயணிப்பதற்கு 24நிமித்திற்க்கு முன்பே ரிசர்வேஷன் கவுண்டரில் கொடுத்து சரி செய்ய வேண்டும் அப்படி தாமதம் ஆகிவிட்டால் சரி செய்ய முடியாது. அதை நினைவில் வைத்து செயல்படுங்கள்

Post a Comment

0 Comments