அபிநந்தனின் வருகையையோட்டி வராலாற்று நிகழ்வு ரத்து!

விமான தாக்குதலின்போது பாகிஸ்தான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட இந்திய விங் கமாண்டர் அபிநந்தன் நேற்று விடுவிக்கப்பட்டர். அவர் ராவல்பிண்டி ராணுவ முகாமில் இருந்து லாகூருக்கு விமானத்தில் அழைத்து வரப்பட்டார். அதன் பின்னர் லாகூரில் இருந்து சாலை வழியாக வாகா எல்லைக்கு அழைத்து வரப்பட்டார்.

அபிநந்தன் ஒப்படைக்கப்படுவதையொட்டி, வாகா எல்லையில் கொடியிறக்கும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. கொடி இறக்கம் என்பது சூரியன் மறைவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்னர் நிகழ்த்தப்படும். ஆனால், நேற்று இந்த நிகழ்வு ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது ஆகும். கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்த தற்கொலை தாக்குதல் காரணமாகவும், 2016 ஆம் ஆண்டு நடந்த இந்தியா - பாகிஸ்தான் தாக்குதல் காரணமாக கொடி இறக்கும் நிகழ்வு ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 





இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனுடன் பாகிஸ்தான் இராணுவ வாகனங்கள் பாதுகாப்புடன் வாகா எல்லை வந்தடைந்த அபிநந்தன், அமிர்தசரஸ் துணை ஆணையாளர் சிவ் துலர் சிங் தில்லான், இந்திய விமானப்படை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.

அபிநந்தன் ஒப்படைக்கப்படுவதால் , வாகா எல்லையில் கொடியிறக்கும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. கொடி இறக்கம் என்பது சூரியன் மறைவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்னர் நிகழ்த்தப்படும். ஆனால், இன்று இந்த நிகழ்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. மிகப்பெரும் கம்பீரம் அவரது முகத்திலும் அவரது நடையிலும் தெரிந்தது குறிப்பிடத்தக்கது ஆகும். 
தாய் நாடு திரும்பியது மகிழ்ச்சியளிப்பதாக அவர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிட தக்கது ஆகும்.

Post a Comment

0 Comments