எஸ்எஸ்சியில் பிளஸ் 2 முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமான எஸ்எஸ்சி சிஹெச்எஸ்எல் போன்ற பணியிடங்களுக்கு  அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் எஸ்எஸ்ஒ, லோயர் டிவிஷன் கிளார்க், எல்டிசி ஜூனியர் செயலகம், அஞ்சல் உதவியாளர், சார்டிங் உதவியாளர் மற்றும் டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

எஸ்எஸ்சியில்  பணிவாய்ப்பு பெறனுமா, இதோ உங்களுக்கான வாய்ப்பு இதுதான், வலிமையுடன் பிடித்து படிங்க தேர்வை வென்று வேலைவாய்ப்பு பெறுங்க.


எஸ்எஸ்சியில்  விண்ணப்பிக்க 18 வயது முதல் 27 வயதிற்குள் இருப்பவர்கள்  விண்ணப்பிக்கலாம். 

எல்டிசி, ஜெஎஸ்ஏ, எஸ்ஏ, டிஇஒ  போன்ற பணிக்கு பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர்  பணிக்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்ற்ய்ம் அவ்வகுப்பில் அறிவியல் மற்றும் கணிதம் முடித்திருக்க வேண்டும். 

கணினி முறையில் தேர்வு (டையர் 1), மற்றும் விரிவான  விளக்கவுரை கொண்ட தேர்வு  (டையர் 2), தட்டச்சு/ திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

ஆன்லைனில் விண்ணப்பங்களை  செலுத்தலாம். 

தேர்வு கட்டணமாக  பொது மற்றும் ஒபிசி பிரிவினர் ரூபாய் 100 விண்ணப்ப கட்டிணமாக செலுத்த வேண்டும்.   பெண்கள் மற்ற பிரிவினருக்கு கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

எஸ்எஸ்சியில் பணிவாய்ப்பு  பெற விண்ணப்பிக்க வேண்டிய தேதி மார்ச் 3, 2019 முதல்  ஏப்ரல் 5, 2019 வரை விணப்பிக்கலாம்.

 எஸ்எஸ்சி டையர் 1தேர்வு தேதி  ஜூலை 1 முதல் 26 தேதி வரை பிரிவாக நடத்தப்படும். 

 எஸ்எஸ்சி டையர் 2 தேர்வு தேதி  செப்டம்பர் 29, 2019 அன்று அறிவிக்கப்படும். 



மேலும் படிக்க:

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு!

Post a Comment

0 Comments