ஹலோ இம்ரான் சார் இதுக்குப் பேருதான் அமைதியா, உங்களுக்கு எல்லாம் நோபல் ஒரு கேடா என்று நேற்று செய்தி படித்தவர்கள் அதிகம் கேட்டிருப்பார்கள்.
பாகிஸ்தானுக்கு கொடுக்கப்படும் அழுத்தம் குறைவு, அவர்களை போருக்கு இழுத்து நோகடிப்பதைவிட வேறு சிக்கல்களை உலக நாடுகள் மூலம் கொண்டு வரலாம். உலக நாடுகளிடமிருந்து பாகிஸ்தான் தனிமைப் பட்டு கிடந்தால் மட்டும் அடங்கும். முக்கியமாக அமெரிக்காவின் மறைமுக ஆதரவுக்கு பாகிஸ்தானுக்கு இருக்க வேண்டும். அல்லது பின்னனியில் சிண்டு முடியும் சீனாதானா சீனா இருக்கின்றதா என்பதைப் பற்றி இந்தியா நிச்சயம் ஆராயும், பாகிஸ்தானை பொருத்தவரைப் பாவப் புண்ணியத்திற்கு அப்பாற் பட்டு செயல்படுகின்றது.
எந்த ஒரு பிடிப்பும் இல்லாமல் பாகிஸ்தான் நம்மை சும்மா சும்மா சீண்டாது. இதை பற்றி தெரியாமல் நாம் உள்ளூரில் சமூக வலைதளத்தில் குடுமிபுடி சண்டை போட்டு அரசியல் பேசிக் கொண்டிருக்கின்றோம்.
இந்தியாவுக்கு வெளிநாட்டு கொள்கையில் எப்பொழுதும் திருத்தம், திமுறும், கெத்தும் இருக்கின்றது. அதைத் தவிர உலக நாடுகளின் உற்பத்திக் கூடங்களில் எல்லாம் நிறைந்திருப்பவர்கள் இந்தியர்கள். இதனாலயே உலக நாடுகளுக்கு நமது மனித ஆற்றல் தேவையாக உள்ளது. அதைவிட நாமுண்டு வேலையுண்டுனு இருப்போம்.
எதாவது பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறி செயல்பட்டு எல்லைக் கட்டுபாட்டு கோட்டுப் பகுதியில் நேற்று தாக்குதலை தொடங்கியது.
இரண்டு நாட்கள் அமைதியாக இருந்த பாகிஸ்தானுக்கு மீண்டும் பிடித்தது கிறுக்கு அதனாலயே எல்லையில் சிக்கல் ஆரம்பித்திருக்கின்றது. புல்வாமா தாக்குதகுக்கு பதில் பிப்ரவரி 26 ஆம் தேதி இந்திய விமானப்படை தாக்குதலை மேற்கொண்டது இந்தியா. இதனை அடுத்து பிப்ரவரி 27 பாகிஸ்தான் படை எஃப் 16 ரக போர் விமானங்கள் வைத்து இந்திய எல்லைக்குள் தாக்குதல் நடத்த முயற்சித்தன. இதனை கண்காணித்த இந்திய விமானப்படை இதற்கு பதிலளித்து தாக்குதல் தொடுத்தது. ஏற்பட்ட இந்த தாக்குதல்களால் மிக் ரக விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. இந்த தாக்குதலின் பொழுது இந்திய வான்படை விமானி அபிநந்தன் பாகிஸ்தானிடம் சிக்க நேர்ந்தது.
இதனை அடுத்து இந்தியா மற்றும் உலக நாடுகளின் அழுத்ததால் பாகிஸ்தான் அபிநந்தனை விடுவித்தது. அதன்பின் எல்லையில் அவ்வப்போது அத்துமீறி தாக்குதல்களை ஈட்டுப்பட்டு வந்தது.
வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் அமைதி நிலவியது நேற்று அதிகாலை முதல் பாகிஸ்தான் ராணுவம் தனது தாக்குதலை தொடங்கியது. இதற்கு இந்தியா பதிலடி கொடுத்தது. அதிகாலை 3.00 மணிக்கு தொடங்கிய 6-30 வரை தாக்குதல்கள் நடைபெற்றது. இந்தியா தனது பங்குக்கு பதிலடி கொடுத்து அசத்தியது என்பதும் குறிப்பிடத் தக்கது ஆகும்.
0 Comments