புல்வாமா மாவட்டத்தில் பதுங்கியுள்ள பயங்கரவாதிகள், ராணுவ வீர்ர்களுக்கிடையே துப்பாக்கிச்சூடு

காஷ்மீரில்  பயங்கரபாதிகள் புலவாமா மாவட்டத்தில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளிடையே நடந்துவரும் துப்பாக்கிச்  சண்டையில் மேஜர் உட்பட 4 வீரர்கள் வீரமரணம் அடைதனர். 

பிப்ரவரி 14 ஆம் நாள் ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஎஃப் படை வீரர்கள் சென்ற வாகனங்களை குறி வைத்து தற்கொலைப் படை பயங்கரவாதி 300 கிலோ வெடிபொருளுடன்  தாக்க  44  வீரர்கள் இறந்தனர். 30க்கு  மேல் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர். நாடும் முழுவதும் மக்கள் பயங்கரவாதிகளுக்கு  எதிர்ப்பு தெரிவித்தனர்

பாகிஸ்தானை தளமாகக் கொண்டு செயலபடும் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பானது நடந்த தாக்குதல் சம்பவத்தை பொறுப்பேற்றுக் கொண்டது. பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுக்க இந்திய அரசு அறிவித்தத குறிப்பிடத்தக்கது ஆகும்.



பயங்கரவாதிகளின் வசிப்பிடம் அறிந்த இந்தி எல்லைப்படை வீரர்கள் காஷ்மீரில் உள்ள புல்வாமா பிங்கலான் பகுதியில் பயங்கரவாதிகளை சுற்றிவளைத்து  வீரர்கள் தாக்க தொடங்கியுள்ளனர். 

எல்லையில் நடைபெறும் கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெறுகின்றது இந்திய  பாதுகாப்பு படையில் ராஷ்டிரிய ரைபிள் பிரிவைச் சேர்ந்த 4 ராணுவவீரர்கள் வீரமரணம் மற்றும் ஒருவர் காயம்அடைந்துள்ளார்.
பயங்கரவாதிகள் மற்றும் ராணுவ வீரர்களிடையே துப்பாக்கிச் சண்டையானது தொடர்ந்து  நடைபெற்று வருகின்றது.

மேலும் படிக்க:

ராஜஸ்தான் மாநில பொக்ரானில் எதற்கும் தயாராக இந்திய வான்ப்படை ஒத்திகை!

Post a Comment

0 Comments