ராஜஸ்தான் மாநில பொக்ரானில் எதற்கும் தயாராக இந்திய வான்ப்படை ஒத்திகை!

இந்தியாவில் பயங்கரவாதிகளின் தற்கொலை தாக்குதலை அடுத்து  பதிலடிக்கு எப்பொழுது வேண்டுமானாலும் தாயராக வேண்டும் என கருதி  ராஜஸ்தானில்  பொக்ரானில் விமானப்படை சார்பாக ஒத்திக்கை பார்க்கப்பட்டது. 

ராணுவ தளபதி விபின் ராபத் மற்றும் ராணுவ உயர் அதிகாரிகள் இதில் பங்கேற்றனர். பயிற்சியில் ஈடுபட்ட 137 விமானங்களும்  சிறப்பாகச் செயல்பட்டன. அனைத்து  விதமான  ஹெலிஹாப்டர்கள் இரவு, பகலாக  பயிற்சி செய்தன. 

இலக்கை தரையிலிருந்து வானில்  தாக்குதலும். வானிலலே வழி மறித்து தாக்குதல் ஏவுகணை சோதனைகளும் நடத்தப்பட்டன. 

சர்ஜிகல் ஸ்டைர்க்: 
நம தேசத்தில் சர்ஜிகல் ஸ்டைர்க்  என்பது துல்லியமாக ஸ்பெசல் எனப்படும்  சிறப்பாக பயிற்சி கொடுக்கப்பட்டு, தெளிவாக திட்டமிட்டு நடத்தப்படுகின்றது. ஸ்பெசல் காமாண்டோவால் நடத்தப்படுகின்றது. சர்ஜிகல் ஸ்டைர்க்  இரண்டு நாட்களுக்கு  முன்பே நடத்தப்படுவதாக குறிப்பிட்ட  சிறப்பு  பயிற்சி பெற்றவர்களை கொண்டு நடத்தப்படுகின்றது. 

இந்தியாவில் பாதான் கோட் ராணுவ முகாம் தாக்கப்பட்ட பின்பு செப்டம்பர் 2018 இல் பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் இரண்டு கி.மீ அப்பால் தீவிரவாத முகாம்கள் முழுவதுமாக அழிக்கப்பட்டு தாக்கப்பட்டது. 

அதுபோல் இம்முன்றை இந்தியா நடத்துமா அல்லது போர்  பிரகடனம் செய்யப் போகின்றதா என பல விவாதங்கள், பேச்சுவார்த்தைகள்  நடத்தப்படுகின்றன. 

இந்தியாவின் ராணுவ தளங்களை தாக்குவது மற்றும்  காஷ்மீரில் 2500 பேர் பயணிகின்ற பகுதிகளில் பயங்கரவாதி 300 கிலோ ஆர்டிஎக்ஸ் பாம்களை வைத்து தாக்குவது எப்படி சாத்தியம்,  அவ்வளவு பயமில்லாத தனம் எங்கிருந்து வந்தது. இந்திய ராணுவத்தில் உள்ளிருந்து எந்த சக்தி உதவுன்றது. அல்லது அன்றும், இன்றும் சரி பாதுகாப்பு வீரர்களை தாக்கி தான் பலசாலி என கோழைத்தனமாக செயல்படுவோர்க்குப் பின் நம்மை அறிந்த நமக்குள் இருக்கும் கருப்பு ஆடு கொடுத்த பலத்தில்தான் பயங்கரவாதிகளால் இவ்வளவு வேகமாக செயல்படுகின்றனர்.  தகவல் தெரிவித்து அதாவது எச்சரிக்கை விடுத்து தாக்குகிறது என்றால் இதில் ஏதோ தவறு நமக்குள்ளே இருக்கின்றது. 

அதனை நாம் கண்டுபிடிக்க வேண்டும். என்னதான் நாம் பதிலடி கொடுத்தாலும் இந்தியா, இந்திய ராணுவ வீரர்கள் என்றால் பயந்துபோகும் அளவிற்கு திறன் கொண்ட  நம்மை நமது  இடத்தில் இருந்தே தாக்குகிறார்கள் என்றால் நமக்குள் ஏதோ தவறு இருக்கின்றது இதனை நாம் கண்டுபிடித்து களைய வேண்டும். அவற்றை நாம் செய்யாதவரை ருசி கண்ட பூனை விடாது, முதலில்  300 கிலோ எடையுள்ள வெடிப்  பொட்ருட்கள் காஷ்மீரில் புல்வாமா வரை எப்படி வந்தது, யார் கொடுத்த அனுமதி எப்பொழுதும் பாதுகாப்பாக இருக்கிற  காஷ்மீர் எல்லையில் வீரர்களைத் தாக்கி செல்லும் துணிவு எப்படி கிடைத்தது.

எந்த இடத்தில் நமது தவறு  உள்ளது, உள்ளிருந்து யார் பயங்கரவாத்ஜிகளுக்கு வழிகாட்டுகிறார்கள், இது போன்ற பல்வேறு சந்தேகங்கள் நிறைய உள்ளன.

தீவிரவாதிகள் , பயங்கரவாதிகளை எதிர்கொள்ளும் அளவிற்கு நமக்கு ஆற்றல் உள்ள பயிற்சி உள்ளது மேலும் அவர்களை எளிதில் அடையாளம் ராணுவ வீரர்களால் கண்டுபிடிக்க முடியும், ஆனால் ராணுவ வீரர்கள் கண்ணில் மண்ணைத் தூவும் வல்லமையை எப்படி பயங்கரவாதிகள் பெறுகிறார்கள் என்பதை கண்டுபிடித்து பாதுகாப்பு கெடுபிடிகளை கடுமையாக்க வேண்டும். 

காஷ்மீர் மக்களுக்கு இந்தியா நமது தேசம் என்னும் எண்ணம் துளிர வைக்க வேண்டும். மக்களிடம் புரிதல்  உண்டாக்க வேண்டிய பொருப்பில் நாம் இருக்கின்றோம். 

இதுவே இறுதியாக இருக்கட்டும்  இன்னொரு முறை இந்தியாவை பற்றி சிந்திக்கவே அனைவரும் அஞ்ச வேண்டும்.

Post a Comment

0 Comments