ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்சநீதிமன்றம் தடை!

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரும்  வேதாந்த ஆலையின் கோரிக்கை உச்சநீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது. 

தூதுக்குடியில் நடைபெற ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த ஆண்டு மே 22 ஆம் தேதி கலெக்டர் அலுவலகம் நோக்கி நடைபெற்ற முற்றுகை போராட்டம் கலவரமாகி  மாறியது. தொடர்ந்து நடபெற்ற கலவரத்தில்  13 பலியாயினர். இதனால் தமிழக அரசு சிறப்பு உத்தரவு பிறப்பித்து ஆலையை  மூட உத்தரவி பிறப்பித்து அதன்படி ஆலையானது மூடப்பட்டது. 



தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் தேசிய பசுமை தீர்ப்பாயம் ஆலையை திறக்கலாம் என்று  தனது உத்தரவு  மூலம் தெரிவித்தது. இதனை எதிர்த்து தமிழக அரசு தொடுத்த மேல்முறையீட்டு  வழக்கானது   உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. 

ஸ்டெர்லைட் நிர்வாகம் பல விதிமுறைகளை  கடைப்பிடிக்காமல் இயங்குகின்றது எனவும், கழிவுகளை அகற்றுவதில் விதிமுறைகள் சரியாக பின்ப்பற்றப்படவில்லை. மேலும் ஆலையின் கழிவுகளான சல்பரிக், காப்பர், ஜிப்சம் போனறவை நிலத்தடி நீரை  மாசு அடையச் செய்துள்ளது. தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தக்க ஆதாரத்தை சமர்பித்தது என தமிழக அரசு சார்பாக சி.எஸ், வைத்தியனாதன் தன் வாதத்தில் தொடர்ந்தார். மேலும்  ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால்  தலைமையிலான ஆயுவு குழுவின் அறிக்கையும்  ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அமைந்ததன் காரணமாக  ஆலையை திறக்க உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. 

இதனை அடுத்து ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தை அனுக  வேதாந்த நிறுவனத்துக்கு உச்சநீதிமன்றம்  அறிவுறுத்தியுள்ளது.

Post a Comment

0 Comments