என்சிஆர்டியின் மாணவர்களுக்காக இணையப் பயன்பாடு வழிக்காட்டல் வெளியீடு!

என்சிஆர்டி மாணவர்களுக்கான இணையப் பயன்பாட்டை எவ்வாறு கொடுக்கப்பட வேண்டும் அவர்களை எவ்வாறு கன்காணிக்க வேண்டும். எவ்வாறு அவர்களுக்கு  இணையப் பயன்பாட்டை முறைப்படுத்துவது குறித்து வழிகாட்டியை வெளியிட்டுள்ளது.  மாணவர்களுக்கு இணையப்  பயனாட்டில் உள்ள உண்மைத் தன்மை என்னவென்பது சரியாக தெரியாமல் புரியாமல் சிக்கலில் சிக்க்கொண்டு  திசை தடுமாறுகின்றனர். அவர்களுக்கு கொடுக்க வேண்டிய வழிக்காட்டல் மூலம் எதை செய்யலாம், எதனால் பிரச்சனை வரும் என்பது தெரியச் செய்ய வேண்டும். 




இணையப் பயன்பாட்டில் மாணவர்கள் எதை செய்ய வேண்டும்:
மற்றவர்களின் தனிமை மற்றும் அந்தரங்களை மதித்து செயல்பட வேண்டும். 
முறையற்ற பதிவுகள் குறித்து புகார்கள் தெரிவிக்க வேண்டும். 
விளையாட்டு, சினிமா படங்கள், இசை, மெனபொருள் டவுன்லோடு செய்யும்பொழுது காப்பி ரைட் பிரச்சனை இருக்கின்றதா என பார்த்து கவனமாகச் செயல்பட வேண்டும். 
ஆன்லைனில் ஏதாவது முறையற்ற ஊடுருவல்கள் இழுத்தால் அது குறித்து பெற்றோர்கள், ஆசிரியர்கள் அல்லது யாரை நாம் நம்புகிறோமோ அவர்களிடம் தெரிவிக்க வேண்டியது அவசியம் ஆகும். 
ஆன்டி வைரஸ்  தொடர்பான விழிப்புணர்வுடன் ஆன்லைனில்  பயன்பாடு இருக்க வேண்டும். பைல்களை பயன்படுத்தும் முன் ஸ்கேன் செய்து  பயன்படுத்த வேண்டும். 

பயன்படுத்தும் மொபைல், மற்றும் லேப்டாப், டேப் எதுவாக இருந்தாலும் நீங்கள் பயன்படுத்தாத பொழுது அதனை லாக்  மோடல் வைக்க வேண்டும் அது போன்று செட்டிங்குகளை செய்வது அவசியம் ஆகும். 

வெப் முகவரியை எப்பொழுதும் கொடுத்து திறக்க வேண்டும் அது சரியாக இருக்கின்றதா என சரிப்பார்த்து செயல்பட வேண்டும். 

சமூக ஊடக பயன்பாட்டின் பொழுது புரோபைல் போட்டோக்கள் நெருங்கிய நண்பர்கள்  மட்டும் பார்க்கலாம் என்ற வித்தத்தில் செட்டிங்குகளை சரிசெய்யுங்கள் அனைவரும் பார்க்குமாறு வைக்க கூடாது. 

நன்கு பரிட்சையமுள்ள தெரிவந்தகளிடம் மட்டும் பழகுதல் நன்மை பயக்கும். 

சமூக ஊடகங்களில் பதிவிடும் கருத்துக்கள் சரியானதாக முறையானதாக யரையும் துன்புறுத்தா வண்ணம் எந்த ஒரு நபர், இயக்கம், அரசை குறித்து கருத்து வெளியிட்டு சட்டச் சிக்கல்கள் உருவாக்ககூடாது.  யாருக்கும் பாதகம் இல்லாமல் பதிவுகள் போடலாம். 

அக்கவுண்டுகள் ஏதாவது டி ஆக்டிவ் செய்யப்பட்டிருந்தால் உடனடியாக புக்கார் கொடுக்கவும். 

தனிப்பட்ட பெயர், முகவரி, படிப்பு,  சார்ந்த பகுதிம் பிறந்த தேதி, தொடர்பு எண் குறித்து யாரிடமும் பகிர வேண்டாம். 

சமூக உடகங்களிம் யாருக்கும் எந்த புகைப்படங்களை கொடுக்கவோ எடுக்கவோ வேண்டாம். 

தெரியாத நபர்களிடமிருந்து  உங்கள் முகவரிக்கு வரும்  எந்த ஒரு அக்கவுண்டை பயன்படுத்தவோ திறக்கவோ வேண்டாம். 

அருகில் உடனிருக்கும் நபர்கள் முனபு பாஸ்வோர்ட் டைப் செய்தல் கூடாது. 

எந்த பிரவுசர்களிலும் யூசர் நேம் மற்றும் பாஸ்வோர்டு சேவ் செய்து வைத்து கூடாது. 

மற்றவர்கள் எந்த ஒரு தகவல்களையும் திருடுதலோ, பாக்கவோ கூடாது. 

எந்த ஒரு மென்பொருளையும் சார்ந்த படைப்பாளி இன்றி பயன்படுத்த வேண்டாம் .

தேவையற்ற கருத்துகள், காமெடிகள் மற்றும் புன்படுத்தும் ஆபாச வார்த்தைகள் பயன்படுத்தி மற்றவர்களிடம் கருத்துக்கள் தெரிவிக்க கூடாது. 

மற்றவர்களின் பாஸ்வோர்டுகள் அவர்களே கொடுத்திருந்தாலும் அதனைப் பயன்படுத்தக் கூடாது. 

தனியாக தெரியாதவர்களை பார்க்க முயற்சிக்க கூடாது.  உடன் யாராது இருப்பின் அவர்களை அழைத்துச் செல்ல வேண்டும். 

 தெரியாதவர்களிடமிருந்து வரும் எந்தவொரு பைலையும் திறக்க கூடாது அவற்றில் வைரஸ் இருக்கலாம்.


Post a Comment

0 Comments