நியூசிலாந்து தொடரில் இந்திய மனங்களை கொள் கொண்ட தோனி, தேசியத்தை காத்து நிற்கும் தோனி, டி-20 இல் போட்டியில் நடந்த சுவாரசியம்,
நேற்று டி-20 போட்டியை இந்திய அணியின் தோனியின் தேசிய உணர்வானது மெய்சிலிர்க்க வைத்தது.
நேற்று நடந்த டி- 20 போட்டியில் தோனியை நெருங்கிய ரசிகர் த காலில் விழ, டக்கென்று ரசிகரின் கையில் இருந்த கொடியை தாங்கி நின்றார். பெருமைக்கூரிய அந்த தருணத்தை கவனித்த வார்ணனையாளர் தோனியின் பொறுப்பை பெருமிதப் படுத்தினார்.
இன்று நாடே பெருமிதப்படுகின்றது. தேசியக் கொடி மண்ணில் விழுந்து அதற்கு அவமானம் நேர்ந்துவிடக் கூடாது என்று, தோனியின் செயல் கிரிக்கெட் ரசிகர்களை மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் பெருமை தேடித்தந்துள்ளது.
விளையாட்டு வீரகளுக்கு பொதுவாகவே படப்படப்பு மற்றும் கவனம் முழுவதும் களத்தில் இருக்கும் அங்குதான் இருக்கும் ஆனால் நம்ம தோனி உணமையிலேயே கூல் மனிதர் என்று நிருபித்து தான் களத்தில் இருந்தாலும் கருத்தோடு செயல்படுவதை செயலில் உணர்த்திவிட்டார்.
தோனி இந்தியாவின் பெருமையை நமக்கு விளையாட்டுக்களத்தில் கற்றுக் கொடுத்தார். இதனை பாடமாக நாம் உணர்ந்து செயல்பட வேண்டும். ஒரு விளையாட்டு வீரரின் பொறுப்புணர்வை செய்தியாக மட்டும் படித்துப் பார்த்தால் போதது, பாடமாகவும் ஏற்க வேண்டும்.
நாட்டுப் பற்றை இங்கிருந்து நாமும் ஒவ்வொருவரும் தோலில் சுமந்து செல்ல வேண்டும். அப்படியே வாய்ப்பு கிடைக்கும் பொழுது சிறுசிறு கடமையை செய்ய வேண்டும்.
0 Comments