இந்திய பாதுகாப்புத்துறையில் கொட்டி கிடக்கும் ஆயிரக்கணக்கான பணியிடங்கள்!

இந்திய ராணுவத்தில் 76,578 பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புத்துறையில் நடப்பாண்டு ஆயிரக்கணகான வீரர்களை இணைக்க மத்திய அரசு ஆணையில் தெரிவித்துள்ளது. 

உள்துறை அமைச்சக அறிவிக்கையின்படி நிரப்ப ஆய்தமாகும் துறைகளை கிழே கொடுத்துள்ளோம். 
 
 54,953 காவலர் பணியிடங்களுக்கு பிப்ரவரி-மார்ச் மாதங்களுக்கு இடையே எழுத்துத் தேர்வு நடத்தப்படும். மொத்த இடங்களில் 7,646 இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டவை என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 



மத்திய ரிசர்வ் போலீஸ் படை 21,566 காலிப் பணியிடங்கள், 
எல்லைப் பாதுகாப்புப் படை 16,984, 
சஷாஸ்த்ர சீமா பல் 8,546, 
இந்திய-திபெத் எல்லை காவல் படை 4,126,
 அஸ்ஸாம் ரைஃபிள்ஸ்  3,076 மற்றும் 
மத்திய தொழிலக பாதுகாப்புப் படை, இதர மத்திய ஆயுதப் படைகளில் மொத்தமுள்ள 76,578 காலி பணியிடங்களை நிரப்புவதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது அரசு. 
 
டிரேடுஸ்மேன், மினிஸ்டரியல், மெடிக்கல், பாராமெடிக்கல், கம்யூனிகேசன், இன்ஜினியரிங் துறைகளில்  2086 பணியிடங்கள்   நிரப்ப ஆயுத்தமாக உள்ளது. 

எஸ்எஸ்பி என அழைக்கப்படும் ஸ்டாப்  செலக்சன் கமிஷன், யூபிஎஸ்சி, சிஏபஎப் போன்ற அரசு தேர்வாணையங்களை பயன்படுத்தி தகுதிப் படைத்தோதோரை கணினி மற்றும் எழுத்து, எஸ்எஸ்பி ஐந்து நாட்கள் தேர்வு போன்றவற்றால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். 

பாதுகாப்புத்துறையில் 2019 ஆம் ஆண்டுக்கான வெளியிடப்படும் அறிவிக்கையை  தேர்வர்கள் சரியாக உற்றுநோக்கி பயிற்சி செய்து தகுதியான பணியில் வாய்ப்பினை உறுதி செய்ய வேண்டும். 
இந்தியாவில் பாதுகாப்புத்துறைக்கான பொன்னான ஆண்டு எனில் நடப்பாண்டினைத்தான் குறிப்பிட வேண்டும்.


மேலும் படிக்க:

Post a Comment

0 Comments