இன்றைய காலகட்டத்தில் அழகு பராமரிப்புக்கு ஆண் பெண் இருவரும் அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.. இது குறித்த ஆயிரக்கணக்கில் மாதமானால் செலவு செய்து பிபி மற்றும் சிசி கீர்ம்கள் வாங்கி செலவு மேல் செலவு செய்து அழகை பராமரிக்கின்றனர்.
அழகுபராமரிப்பு என்பது அவசியமானது ஆகும். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் அது குறித்து நாம் விழிப்புணர்வுடன் தெரிந்திருக்க வேண்டும்.
கெமிக்கல் கலந்த மாய்ஸ்ரைசர், அழகு சாதனப் பொருட்கள் பெரும் ஆபத்தை விளைவிக்கும் அது குறித்த தெளிவான புரிதலுடன் செயல்பட வேண்டும்.
மேக்கப் அப் போடும் பொழுது இருக்கும் அக்கரையைப் போல் அதனை முழுமையாக எடுக்கும் பொழுதும் இருக்க வேண்டும்.
அழகு பராமரிப்புக்கு பழங்கால எளிய டிப்ஸ் உங்களுக்காக இங்கு கொடுத்துள்ளோம். அதனைப் படியுங்க மிக எளிமையானது அதனைப் பின்ப்பற்றி வாருங்கள் உடனடி பலன் கிடைக்கும்.
தேவைப்படும் பொருட்கள்
கடலை மாவு
ரோஸ் வாட்டர்
முல்தானி மட்டி
எலுமிச்சை
கடலை மாவு ரோஸ் வாட்டர் ஒன்றாக கலந்து எலும்பிச்சையை ஒன்றின் சாறு பிழிந்து நன்கு கலக்க வேண்டும். தண்ணீர் எதுவும் கலக்காமல் கலக்க வேண்டும்.
முகமெங்கும் பூசி 20 நிமிடம் கழித்து முகத்தில் பூசப்பட்ட அக்கலவையை முல்தானி மட்டி கொண்டு கழுவ வேண்டும். சோப்பு பயன்படுத்த கூடாது.
மேலே குறிப்பிட்ட அந்த கலவையை ஆண்பெண் யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். முகம் பளபளப்பும், ஜொலிஜொலிப்பு கிடைக்க பெறும். கருவளையம், முகத்தில் தேவையற்ற அழுக்குகள், எண்ணெய் வடிதல் மற்று கோளாருகள் அனைத்தும் தீர்த்து சூப்பர் லூக்கை கொடுக்கும்.
வாரத்தில் மூன்று முறை பயன்படுத்தி வாருங்கள் உடனடி மாற்றம் உறுதி ஆகும். எளிமையான இந்த முகப்பூச்சை பயன்படுத்தி அழகைப் பராமரியுங்கள் ஆரோக்கியமும் அழகும் ஒரு சேர கிடைக்கும் எந்த வித பக்க விளைவும் இல்லாத எளிமயான அழகு பராமரிப்பு முறையானது எளிமையாக குறைந்த செலவில் செய்ய கூடியது ஆகும் வீட்டிலேயே செய்யலாம்.
0 Comments