இமயமலை ஆகாமல் எனது உயிர்போகாது
சூரியன் தூங்கலாம் எனது விழி மூடாது
வேர்வை மலை சிந்தாமல் வெற்றி மழை தூவாது
எல்லையை தொடும் வரை எனது கட்டை வேகாது
இதுபோன்ற வரிகளை சோர்ந்து போகும் போது நினைவில் வைத்து செயல்படுங்கள். இலக்கு எதுவாயினும் எளிதில் வெற்றி பெறலாம்.
நீங்கள் கல்லுரியில் பாடங்களில் அதிக மதிபெண் பெற போராடுகிறீர்களா, தொழிலில் தொடர் தோல்வியை மீட்க போராடுகிறீர்களா
விளையாட்டில் உங்கள் சிறப்பான பர்ஃபாமென்ஸ் மீட்டெடுக்கனும்,
திறமைக்கேற்ற வேலையைப் பெறப் போராடுகிறீர்களா, ..
அப்பொழுது உங்களுக்கு இருக்க வேண்டிய ஒன்று போராடும் குணம். அனைத்தையும் எளிதில் கடக்க வேண்டும் என்ற எண்ணம். எவ்வளவு தோற்றாலும் எழ முடியும் என்று உள்ளெழுப்பல் இதுதான் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும். தொடர் தோல்விகளை எளிதில் சமாளிக்கும் சக்தியும் உள்ளிருந்து ஊக்குவிக்கும்.
இன்றைய காலகட்டத்தில் உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல், முயற்சி திருவிணையாக்கும் இவை தொடர்ந்து ஒருவரிடம் இருக்க வேண்டும். எவர் ஒருவர் நான் ஸ்டாப்பாக உழைக்கின்றாரோ, வெற்றி தோல்விக்கு அடுத்த கட்டமான இலக்கை நோக்கி ஓடுகின்றாரோ அவர் நிலைத்த வெற்றியை அனுபவிக்கும் திறன் கொண்டவர் ஆவார்.
நமது பாடத்திட்டத்தில், பயிற்சி வகுப்பில் முக்கியமாக இறன்றைய காலகட்டத்தில் இருக்க வேண்டிய முக்கிய பாடங்கள் பயிற்சி எனில் அவற்றில் திறன் வளர்ப்பு அவசியம் ஆகும்.
திறன் வளர்ப்பில் நம்மை நாம் கட்டமைத்து வழிநடத்திச் செல்வது எவ்வாறு நம்மைச் சுற்றி என்ன நடக்கின்றது இதுபோன்ற விழிப்புணர்வு, நிதான வேகத்தில் செயல்பட்டு, சூழ்நிலைகளை கடத்தல் போன்றவை கற்றுக் கொடுக்கப்பட வேண்டியது அவசியம் ஆகும். இதனை பள்ளி மற்றும் வீடு, சமுதாயம், தகவல் தொடர்பு சாதனங்கள் தொழில் நுட்ப சாதனங்களில் கற்றுக் கொடுத்தல் அவசியமாகும்.
பொதுத் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள், வேலை தேடும் இளைஞர்கள் மற்றும், ஆபிஸ் ஸ்டெஸ்ஸில் உள்ளவர்களுக்கு இந்த குறிப்புகள் உதவிகரமாக இருக்கும்.
மேலும்படிக்க:
மேலும்படிக்க:
0 Comments