தடம்புரளும் சமுதாயம் தரிகெட்டு ஓடுகிறான் தனிமனிதன்

பேஸிக் மொபைல்,  கேமரா மொபைல், 2ஜி நெட், 3 நெட், 4ஜி நெட், 5 நெட், பாவடை தாவனி, பாவடை சட்டை, சட்டை பேண்ட், சார்ட்ஸ், பென்சில் பிட். 
களிமண் பாண்டஉணவு,  அலுமனியம், சிலவர், இரும்பு, டெப்லான் செராமிக் என  நமது வாழ்வியல் முறையில் பல்வேறு புதுமைகள் டிரெண்டுகள் நிறைய புகுத்தியுள்ளோம். 

வாழ்வியல் முறையில் நாம் செய்தது என்ன நாம்  புகுத்திய உணவு முறைகளில் என்ன பயன் அடைந்தோம் மண்பாண்ட செம்பு இரும்பில் சமைத்த பொழுது இருந்த  ஆரோக்கியம் இப்பொழுது உண்டா?

மண்பாண்டங்கள் மற்றும் செம்பு, இரும்பு பித்தளையில் சமைத்த பொழுது கால்வலி, மூட்டுவலி, சர்க்கரை, பிளெட் பிரெசர் எதாவது வந்ததா  அப்பொழுதும் 30 கோடி மக்கள் வாழ்ந்தனர் ஆனால் இப்பொழுது 120 கோடி வாழ்கின்றனர். 

30 கோடி மக்கள் வாழ்ந்தபொழுது வசதிகள் குறைவு ஆரோக்கியம், உழைப்பு, ஒற்றுமை மற்றும் உண்மை அதிகம் இன்று 120 கோடிக்கு மேல் ஆனால் நோய்  தொற்று காற்று, மண் போன்றவற்றை மாசடையச் செய்து உள்ளோம். வாழ்வியல் முறையில் மாற்றங்களை புகுத்துகிறேன் என்று வாழ்க்கையை எந்திரத் தனமாக்கியுள்ளோம். எதிலும் ஒரு வரைமுறையுண்டு நம்மையும் நமக்கு வாழ்வு தந்த இயற்கையையும் உண்டு இல்லை என்று  வாட்டி வதைத்து எடுக்கின்றோம். 



இதன் விளைவு இன்றைய நம்முடைய வாழ்வியலில் சிக்கித் தவிக்கின்றது. 
ஆணும் பெண்ணும் சரிநிகர் சாதிக்க பிறந்தவர்கள் என்று நம்மை சீராட்டி பாலூட்டி, படிப்பு தந்த பெற்றோர்களையும் நமக்கு அங்கிகாரம் தந்த சமூகத்தை சீர்த்திருத்தி பாதுகாப்பு செய்து பகுத்தாய்ந்து செயல்படும் திறனற்ற சமுதாயத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் எனும் பொழுது  நமக்கெதற்கு வளர்ச்சி, நமக்கு எதற்கு  மாற்றம் வசதிவாய்ப்புகள் என்ற கேள்விதான் உள்ளுக்குள் எழுகின்றது. 

2019 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துவிட்டோம் கல்வி, கணினி, ஸ்மார்ட்போன் என எல்லா வசதியும்  திறன் வளர்ப்பும் கிடைத்தது ஆனால் கிடைத்த கல்வியை கிடையிலே போட்டோம் இன்னும் கிணற்று தவளையாக இருக்கின்றோம். அரசு கொடுத்த கல்வியும் அரசுக்கு கொடுக்கும் காசையும் கொண்டு நாட்டை காடாக மாற்றியதுதான்   இதுவரை நடந்துள்ளது. 

ஆணும் பெண்ணும்  ஒருவருக்கொருவர் சளைத்தவரல்ல, அதை உணர்ந்து படித்தால் வாழ்வில் உயரலாம் என கற்றுக் கொடுத்தால் ஆண் பெண்ணையும் பெண் ஆணையும்  நெறித்தவறிப் பார்க்க கற்றுக் கொண்டோம். அதனால் அப்பாவிகளின் வாழ்வு பறித்தோம் எதுவும் தவறில்லை  இந்தா தொடச்சுக்கோ என்கின்றோம். 

எங்கபோகுது எங்கப் போகுது நாடு, என சினிமா வசனம் ரசித்தோம் இன்று அதற்க்கே அடிமையாய் கிடந்து எங்கோ தேசத்தை போக வைக்கின்றோம். 
தனிமனிதன் தனி ஒருவன் என  வந்த பெரும்பாண்மையான படங்களை ஜோக்காராக்கிய பெருமை நம்மையே சாரும். பின்பு அதுசரியில்லை அவன் சரியில்லை இவள் சரியில்லை, இப்பொழுது நானும் சரியில்லை நியும் சரியில்லை இது எல்லாம் ஓகே இங்க யாரும் சரியில்லை சோ தட் நாமும் சரியில்லை என வாழும் இந்த தினசரி தடுமாற்றம் தேசத்தை  அதிக குற்றத்திற்கும் வன்மத்திற்கும் உள்ளாக்கும் என்பதில் மாற்றுக்கருத்து எதுவுமில்லை. 

மேலும் படிக்க:

பாராளுமன்றத்தில் 33% பெண்களுக்கான இடஓதுக்கீடு! இன்னும் எத்தனை நாட்களுக்கு இந்த அரசியல் நாடகம்!,,,

Post a Comment

0 Comments