இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் காலம் எங்கு பார்த்தாலும் தேர்தல் ஜுரம் அடிக்க ஆரம்பித்துவிட்டது. மோடியின் தமிழ்நாட்டுப் பயணம் மற்றும் ராகுல் காந்தியில் தேர்தல் அறிக்கை என எங்கு பார்த்தாலும் அனல் பறக்கும் செய்திகள் ஆறப்போட்டு கடையை விரிக்கும் ஊடகங்கள் என பலே கில்லாடித்தனங்கள் நிறைந்து காணக்கிடக்கின்றன.
சபரிமலை வேண்டாம், சரி சம உரிமை பார்லிமெண்டில் வேண்டும்:
வெட்கம் வேதனை 70 ஆண்டுகள் சுதந்திர கொண்டாட்டம் முடித்துவிட்டோம். ஆனால் இந்தியாவில் பார்லிமெண்டில் பெண்களுக்கு 33% சதவீகித இடஓதுக்கீடு மட்டுதான் கிடைக்கப் போகின்றது.
ஓட்டு வேட்டைக்கு 33% ஒதுக்கீடு கொடுக்கவே இன்னும் நாட்டில் உள்ள அரசியல்வாதிகள் தயாரில்லை இந்த நிலை இதனை வைத்து அரசியல் செய்ய தயராகிவிட்டனர்.
எங்களுக்கு சபரிமலை போக வேண்டாம் சரிசமம் உரிமை நாடாளுமன்றத்தில் கேட்க பெண்களுக்கு என்று துணிவு வரும் என்று தெரியவில்லை. நாட்டில் உள்ள பல துறைகள் முன்னேற்றம் கண்டுவிட்டன ஆனால் இந்த 33% இட ஓதுக்கீட்டை கொடுக்க இழுப்பறிகள் நிகழ்வதைப் பார்த்தால் நமது நாட்டின் இன்னும் பெண்களுக்கு அரசியல் சுதந்திரம் முழுமையாக வழங்கப்படவில்லை என்பது உண்மை.
பெண் இரண்டாம் பட்சமாகத்தான் நடத்தப்படுகின்ராள் என்று தெரியவருகின்றது. சரிசமமான அனுகுமுறை இல்லையெனில் பிறகு எதற்கு பெண்களின் ஓட்டு மட்டும் தேவைப்படுகின்றது.
பெண் என்பவள் தேசத்தின் ஆணிவேர் என்பதை மறக்க வேண்டாம் . இதுவரை 33% தர முடியாத அரசுகள் இனிவந்து எதை கொடுத்து என்னப் பயன் என்று கேள்விகள் பெண்களின் மத்தியில் எழுகின்றது.
மொழிக்காக, கலாச்சாரத்திற்காக பழமையான சின்னத்திற்காக போராடும் நாம் உயிருள்ள ஒரு சகஜீவனைப்பற்றி இன்னும் பேசுவத்தில்லை.
பெண்ணியம் பேசி அதில் உரிமை வேண்டும் இதில் உரிமை வேண்டும் என்று கேட் கிறோமே!,, எப்பொழுது பார்லிமெண்ட்டில் சம உரிமை கேட்க
போகின்றோம்?,,,
ஜல்லிக்கட்டு காளையின் பாரம்பரியம் காக்க முனைந்த தேசத்தில் பெண் உரிமை பெண்ணியம் எல்லாம் பொய் வேசம் என்றுதான் தோன்றுகின்றது.
சபரிமலை எல்லாம் கண்துடைப்பு போல்தான் இருக்கின்றது. அரசியலில் 50% சரிசமம்மான உரிமை இன்னும் வழங்கப்படவில்லை இது சமுக துரோகம் என்றுதான் கூற வேண்டும். இவ்வற்றில் தேர்தல் வாக்குறுதிகளில் 33% இடஓதுக்கீட்டை எங்களை வைத்து விளையாட தயாராகிவிட்டன அரசியல் கட்சிகள் இதில் என்ன நியாயம் உள்ளது.
இந்திராகாந்தி போன்ற பெண்கள் ஆட்சி செய்த இந்திய தேசியத்தில் இன்னும் 33% ஒதுக்கீடு கொடுக்க 70 ஆண்டுகள் காத்துகிடக்கின்றோம் எனில் எந்தளவிற்கு நாம் பின்த்தங்கியுள்ளோம்.
சுயத்தை மறந்து இன்னும் போலி தேர்தல் வாக்குறுதிகளை நம்பி வாழும் நாம் என்று மாற்றம் அடைய போகின்றோம். நமக்கான உரிமையை என்று மீட்டு எடுக்கப் போகின்றோம்.
வாழ்வில் அனைத்து செயல்களிலும் பெண்களின் பங்கு வேண்டும் ஆனால் அரசியலில் பெண்களுக்கு பங்களிக்க தயங்குவதேன். மிகப்பெரிய மக்களாட்சி கொண்ட இந்தியா போன்ற நாட்டில் இவ்வாறு பின்தங்கிய சிந்தனைப் போக்கு இருப்பின் இன்னும் மற்ற நாடுகளுக்கு எவ்வாறு எடுத்துரைப்போம்.
ஒரு தேசத்தில் ஆண் பெண் இருவரும் எப்பொழுது சமமாக எல்லா துறையிலும் காலூன்றி நிற்கின்றனறோ அன்றுதான் அந்த தேசம் வளர்ந்த நிலைக்குச் செல்லும்.
நீதிமன்றங்கள் :
நீதிமன்றங்கள் நாட்டில் பெண்களுக்காக உரிமையை மீட்டுத்தர முக்கிய பங்காற்றுகின்றன. ஐப்பன் கோவில் விவகாரத்தில் தலையிட்ட நீதிமன்றம் இன்னும் நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு மறுக்கப்பட்டுள்ள 50 சதவீகித இடஓதுக்கீட்டைப் பற்றி பேசமால் இருப்பது என்ன நியாயம்.
உரிமைகளுக்காக போராடும் பெண்ணியவாதிகளுக்கு பெண்ணியம் எது என்று தெரிந்து போராடுகீறீர்களா,, நீங்கள் அப்படியெனில் இன்னும் 50% சதவீகித இடஓதுக்கீடு தரப்படவில்லை என முதலில் போராடுங்கள் ஆட்சியில் பங்கு கேளுங்கள் அப்பொழுதுதான் அரசியல் வாதிகளின் உண்மை முகம் தெரியவரும்.
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதும் அச்சமில்லையே
என்ற பாரதி வாக்கு நினைவிருந்தால் நமக்கான உரிமையை கேட்க முனைவோம். 50 சதவீகித உரிமையை மீட்டெடுக்கப முன்னெடுத்து நிற்போம், நீதிமன்றத்தை அனுகுவோம் இதுதான் பெண்ணியம். இதைத்தான் உலகத்திலுள்ள பெண்களுக்கு தேவையாக இருக்கின்றது.
0 Comments